ஏங்க உடுத்தறதுக்கு துணியா இல்லை? த்ரோபேக் பிகினி போட்டோ பதிவிட்ட ஹீரோயின்..கலாய்க்கும் ரசிகர்கள்!
மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள த்ரோபேக் பிகினி போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
அழகி போட்டிகளில், அதிக டைட்டிலை வென்றவர் என்ற அறிமுகத்துடன் பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரியானவர், ஊர்வசி ரவ்தெலா.
அதனால்தானோ என்னவோ, போட்டோக்களின் மீதும் போட்டோஷூட் மீதும் ஊர்வசிக்கு அப்படியொரு ப்ரியம்.

போட்டோஷுட்
பிகினி, கிளாமர், ஒர்க் அவுட் என வகை வகையான போட்டோஷுட் நடத்தியுள்ள ஊர்வசி, அவற்றை தனது இன்ஸ்டாகிராமில் நிரப்பி வருகிறார். தினமும் ஒன்று அல்லது இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒன்று என புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது ஊர்வசியின் சோசியல் மீடியா டீம்! இதைப் பார்ப்பதற்காகவே அவரது இன்ஸ்டா பக்கத்துக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம்.

பாலிவுட் படம்
அவர்களை ஏமாற்றாத பாக்கியத்தையும் செவ்வனே செய்துவருகிறார், ஊர்வசி. பிரபல மாடலான அவரது முதல் பாலிவுட் படம், சிங் சாப் த கிரேட்'. சன்னி தியோல் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ஊர்வசிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
அடுத்து, புல்கிட் சாம்ராட், யாமி கவுதமுடன் இணைந்து, ஷனம் ரே என்ற படத்தில் நடித்தார்.

திருட்டுப் பயலே 2
விஷால் பாண்டியாவின் ஹேட் ஸ்டோரி 4, அனில் பாஸ்மியின் பகல்பன்டி உட்பட சில படங்களில் நடித்துள்ள ஊர்வசி, இப்போது 'திருட்டுப் பயலே 2' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். அஜய் லோஹன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'விர்ஜின் பானுப்பிரியா' என்ற படம் இந்த மாதம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். லாக்டவுனால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்
இந்த லாக்டவுனில் நடிகைகளில் ஒரே பொழுதுபோக்கு இன்ஸ்டாகிராம். தங்களது போட்டோஸை அதில் பதிவிட்டு வரும் அவர்கள், த்ரோபேக் என பழைய போட்டோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஊர்வசியும் இப்போது த்ரோபேக் போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள பிகினி போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜாலியான கமென்ட்
'பூமி நம் வீடு போன்றது. அதை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாழ்வதற்கான சிறந்த இடமாக அதை மாற்றுவோம் என உறுதியேற்போம்' என்று கேப்ஷனில் கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களை தெரிவித்து வருகின்றனர்.

துணியா இல்லை
'எப்பவும் இப்படியே டிரெஸ் போடறீங்களே.. எனக்காக, நம்ம டிரெடிஷனல் டிரெஸ் போட்டு ஒரு போட்டோ போடுங்களேன்' என்று ஒரு ரசிகர் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு நெட்டிசன், உடுத்தறதுக்கு துணியா இல்லை.. நான் வேணா தரவா? என்று கலாய்த்துள்ளார். இன்னொருவர் இந்த போட்டோவுக்கும் இந்த கேப்ஷனுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications