Iniya: ஆத்தாடி.. எவ்வளவு பெரிய கவுனு.. பார்க்கவே பாவமா இருக்கே.. இனியாவை கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை: தேசிய விருதை வென்ற வாகை சூடவா படத்தில் சரசர சாரக்காத்து வீசும் போது பாடலுக்கு கண்ணாலே பேசி தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் நடிகை இனியா.
ஹீரோயினியாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் இனியா, இன்ஸ்டாகிராமில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

வாகை சூடவா: இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த வாகை சூடவா படத்தில் நடிகை இனியா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். வாகை சூடவா தேசிய விருது பெற்றதை அடுத்து இனியா கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக இவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை.
படவாய்ப்பு இல்லை: படவாய்ப்பு சரியாக அமையாததால், சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து வரும் இனியா, பரத்துடன் பொட்டு என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.
சீரன் படத்தில்: இதையடுத்து, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்த நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அறிமுக இயக்குநர் துரைமுருகன் இயக்கி வரும் சீரன் திரைப்படத்தில் உருவாகி உள்ள சீரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், நரேன், சென்ராயன் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர்.
ஆத்தாடி எவ்வளவு பெரிய கவுன்: இந்நிலையில் நடிகை இனியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியன் படத்தில் வரும் டெலிபோன் மணிபோல் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார். முதல் படத்தில் சிக்குன இருந்த இனியா தற்போது உடல் எடை அதிகரித்து அடையாளமே தெரியாமல் இருக்கிறார். இதைப்பார்த்த பேன்ஸ், ஆத்தாடி.. எவ்வளவு பெரிய கவுனு.. பாக்கவே பாவமா இருக்கே என அவரை பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











