Priya anand, net worth : நடிகை பிரியா ஆனந்த்தின் சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை பிரியா ஆனந்த், சென்னை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வளர்ந்ததால், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர்.

பிரியா ஆனந்த்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த் வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
எதிர் நீச்சல்: வாமனன் படத்தில் இடம்பெற்ற ஏதோ செய்கிறாய் பாடல் மிகப்பெரிய அளவில் ரீச்சாகி பிரியா ஆனந்திற்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. வாமனன் படத்துக்கு பிறகு புகைப்படம், 180, எதிர் நீச்சல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் இவர் சேர்ந்து நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் பிரியா ஆனந்திற்கு ஜாக்பாட்டாக அமைந்தது.

அடுத்தடுத்த படங்களில் பிஸி: இதைத்தொடர்ந்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருத்தன், LKG, ஆதித்ய வர்மா என படங்கள் பிஸியாக நடித்தார். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ரூ.11 கோடி ரூபாய்: தற்போது பிரியா ஆனந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும், அந்தகன், சுமோ என தமிழ் படத்திலும் கன்னடப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பிரியா ஆனந்த் ரூ.11 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பிரியா ஆனந்த் லியோ படத்திற்காக 80 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின் அவரது சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











