Jasmin bhasin: லென்ஸ் அணிந்ததால் பாதிக்கப்பட்ட கண் பார்வை.. சிக்கலில் வானம் பட நடிகை!

சென்னை: நடிகர் சிம்புவுடன் வானம் படத்தில் அவரது காதலியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜாஸ்மின் பசின். இவர் தொடர்ந்து சித்தார்த்துடன் ஜில் ஜங் ஜக் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்தார் ஜாஸ்மின் பசின்.

இந்தியில் சில தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ஜாஸ்மின். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக லென்ஸ் அணிந்ததால் அவரது கண்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அவர் தனது instagram பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

Jasmin bhasin Vaanam movie tamil cinema

நடிகை ஜாஸ்மின் பசின்: நடிகர் சிம்புவுடன் வானம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜாஸ்மின் பசின். இதையடுத்து சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் படத்திலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ள, ஜாஸ்மின் பசின் தற்போது இந்தியில் சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த பதிவுகளை கொடுத்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

லென்ஸ் அணிந்ததால் கண்கள் பாதிப்பு: இந்நிலையில் இவருக்கு திடீரென கருவிழி பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசிய பசின், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்ததாகவும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு கண்களில் லென்ஸ் மாட்டியதாகவும் கூறியுள்ளார். அதில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை திடீரென கண்கள் வலிக்க தொடங்கியதாகவும் இருந்தும் கண்ணாடி அணிந்து கொண்டு வேதனையுடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்களில் தொடர்ந்து வலி இருந்ததையும் பகிர்ந்துள்ளார்.

Jasmin bhasin Vaanam movie tamil cinema

தொடர் சிகிச்சை: தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததாகவும் தன்னுடைய கண்களை பரிசோதித்த மருத்துவர் கருவிழிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதாகவும் ஜாஸ்மின் பசின் கூறியுள்ளார். இதற்காக தான் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் இன்னும் வலி அதிகமாகியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் தன்னால் இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்றும் ஜாஸ்மின் பசின் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை இன்னும் சில தினங்களில் சரியாகும் என்று மருத்துவர் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது கண்களில் மருத்துவர்கள் பேண்டேஜ் சுற்றியுள்ளதை பார்க்க முடிந்தது.

வானம் பட நாயகி: இதனால் தன்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை என்று அவர் தன்னுடைய முந்தைய பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தான் குணமடைந்து வருவதாக அவர் தனது சமீபத்திய பதிவில் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜாஸ்மின் பசின் கடந்த 2011ம் ஆண்டில் தமிழில் வானம் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் ஜாஸ்மின் பசின். இந்நிலையில் அவரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X