வாத்தி ஹீரோயினுக்கு வாழ்க்கை மாறப்போகுதாம்.. காதலருடன் திருமணத்துக்கு ரெடியான சம்யுக்தா!

சென்னை: கடந்த ஆண்டு தனுஷின் வாத்தி மற்றும் தெலுங்கில் வெளியான விருபாக்‌ஷா உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சம்யுக்தா மேனன். மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் விரைவில் தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 28 வயதாகும் சம்யுக்தா மேனன் விருபாக்‌ஷா 2 மற்றும் டெவில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

2016ல் மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். 2018ல் வெளியான தீவண்டி படம் சம்யுக்தா மேனனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழில் களறி மற்றும் ஜூலை காற்றில் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்தாலும் அந்த படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், ரசிகர்களுக்கு சம்யுக்தா மேனன் தமிழில் அறிமுகமானதே தனுஷின் வாத்தி படத்தில் தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Vaathi heroine Samyuktha Menon ready for her marriage?

நாசருக்கு ஜோடி: 2021ம் ஆண்டு வி.கே. பிரகாஷ் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான எரிடா படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வயதான தொழிலதிபருக்கு மனைவியாக செல்லும் சம்யுக்தா மேனன் அவரிடம் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் அந்த படத்தின் கதை. ஆடுகளம் கிஷோர் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அடியாத்தி இது என்ன ஃபீல்: தனுஷின் வாத்தி படத்தில் டீச்சராக நடித்த சம்யுக்தா மேனனை தமிழ் சினிமா ரசிகர்கள் வேறலெவலில் கொண்டாடினர். அந்த படத்தில் தனுஷுக்கு பிறகு ரசிகர்களை பார்க்க வைத்த ஒரே நபர் என்றால் அது சம்யுக்தா மேனன் தான். வாத்தி படத்தில் சாந்தமாக நடித்த சம்யுக்தா மேனன் விருபாக்‌ஷா படத்தில் பேயாக நடித்து மிரட்டி எடுத்து விட்டார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்த மாதம் திருமணம்?: 28 வயதாகும் சம்யுக்தா மேனன் கடந்த ஆண்டே தனது காதலரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வதந்திகள் வெளியான நிலையில், அதையெல்லாம் மறுத்து இருந்தார் சம்யுக்தா மேனன். ஆனால், தற்போது புதிதாக எந்த படத்தையும் கமிட் செய்துக் கொள்ளாமல் ஏற்கனவே கமிட்டான படங்களில் வேக வேகமாக நடித்து வரும் நிலையில், காதலரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தை மாதத்துக்கு பிறகு நல்ல சேதி சொல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X