மெழுகு சிலை போல் மாறிய நடிகை சம்யுக்தா..குவியும் லைக்குகள்!

சென்னை: ஒரு தல காதல சொன்னேன் இந்த தருதல வந்தே என்ற பாட்டின் மூலம் ரசிகர்களின் மனதிற்குள் பளீச் என்று ஒட்டிக்கொண்ட நடிகை தான் சம்யுக்தா.தமிழ் தெலுங்கு, கன்னடம் என பிஸியான நடிகையாக மாறி இவர் தனது இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோவை ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்

2016ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் களரி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த படம் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமையவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி’ படத்தின் மூலம்தான் அதிகளவில் கவனம் பெற்றார்.

samyuktha Vaathi Dhanush

நடிகை சம்யுக்தா: மலையாளத்தில் வெளியாகி வசூலை அள்ளிய அய்யப்பனும் கோஷி-யும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்த சம்யுக்தா மேனன். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான விருபாக்ஷா'படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மலையாள சினிமாவில் அது இல்ல: தற்போது பிஸியான நடிகையாக இருக்கும் அண்மையில் அளித்த பேட்டியில், தெலுங்கு சினிமாவில் நடிப்பது தனக்கு இருக்கிறது. மலையாள படங்களில் நடிக்கும் போது பெரிதாக மேக்கப் தேவையில்லை. அங்கு நடிப்பது எனக்கு சுதந்திரமாக இருந்தது. ஆனால், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் மீது அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி இருந்தது. மேக்கப் மற்றும் ஆடைக்கே கவனத்தைச் செலுத்துவதால் நடிப்பின் மீது கவனத்தை செலுத்த முடியவில்லை என்று சம்யுக்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

மெழுகு சிலை: இணையத்தில் ஆக்டிவாக இருந்தால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்பதை தெரிந்து கொண்ட சம்யுக்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெழுகு சிலை போல இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெற்று வருகிறது. நடிகை சம்யுக்தாவை இன்ஸ்டாகிராமில் இரண்டு புள்ளி ஒன்பது மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X