திரிஷா என்ட்ரி.. இளம் தலைவர் வாழ்கவே என கோஷம்.. அரசியலுக்கு வருவது உறுதிதானோ?
சென்னை: விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து கடந்த சில மாதங்களாகவே பல பேச்சுக்கள் பறக்கின்றன. அதற்கு காரணம் வேறு யாரும் இல்லை அவர்கள்தான். விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா மனுத்தாக்கல் செய்த சில நாட்களிலேயே அவர்கள் இரண்டு பேரும் ஜோடியாக வந்து திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அதனையடுத்து பெரிய விவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திரிஷா வாக்களிக்க வந்தபோது நடந்த ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவை அவர் தாக்கல் செய்த சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக திருமணத்துக்கு வந்திருந்தார்கள். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரையும் இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவிய நிலைமையில்; அவர்கள் இப்படி செய்தது அதற்கு மேலும் வலு சேர்த்தது. அதுமட்டுமின்றி திரிஷா சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வரவிருக்கிறார்; விஜய்யின் கட்சியில்தான் சேரவிருக்கிறார் என்று கூறி; பல வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு பேட்டியில் கூறியதை ட்ரெண்டாக்கினார்கள் ரசிகர்கள்.

மறுத்த திரிஷா: அதோடு மட்டுமின்றி அரசியலுக்கு அவர் வரவில்லை என்றாலும்; கண்டிப்பாக சினிமாவை விட்டு விலகவிருக்கிறார். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் தகவல்கள் பரவின. அதை கேட்டுக்கொண்டு ஆரம்பத்தில் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் சோஷியல் மீடியா முழுவதும் இதே பேச்சுக்கள் வருவதை பார்த்து, வெளியான தகவல்கள் அனைத்திலும் உண்மை இல்லை என்பதை தன்னுடைய ஸ்டைலில் மறுத்து பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக திரிஷாவின் ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள்.
திரிஷாவின் சேட்டை: சூழல் இப்படி இருக்க நேற்று சென்னையில் திரிஷா தனது தாய் உமாவோடு சேர்ந்து வாக்களித்தார். வாக்களித்துவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கில்லி பட பாடல் எடிட்டுடன் அந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர்களோ திரிஷா கண்டிப்பாக விஜய்க்குதான் வாக்களித்திருக்கிறார். அதனால்தான் அவர்கள் சேர்ந்து நடித்த முதல் படமான கில்லியிலிருந்து பாடலை சேர்த்திருக்கிறார் என்று உறுதியோடு சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இளம் தலைவர் வாழ்கவே: இந்நிலையில் இன்னொரு வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அவர் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்தவர்கள்; திரிஷாவை பார்த்ததும், 'வாழ்க வாழ்கவே இளம் தலைவர் வாழ்கவே' என புகழ்ந்து கோஷமிட்டார்கள். அதை பார்த்த நெட்டிசன்களோ அய்யயோ போற போக்கை பார்த்தால் கண்டிப்பாக திரிஷாவை அரசியலுக்கு வரவழைத்துவிடுவார்கள் போல; என்ன கொடுமை சார் இது என்று நக்கலாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
திரிஷாவின் லைன் அப்: இதற்கிடையே திரிஷாவின் லைன் அப்பை பொறுத்தவரை மே மாதம் கருப்பு படமும், ஜூலை மாதம் விஸ்வம்பரா படமும் வரவிருக்கின்றன. மேலும் சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். சினிமாவில் இப்படி படு பிஸியாக இருக்கும் அவர்; எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதுதான் அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறும் விஷயமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications