சூர்ய நமஸ்காரத்துல இத்தனை வகை இருக்கா.. ஸ்டெப் பை ஸ்டெப்பா.. சொல்லித் தருவது யாருன்னு பாருங்க!

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி வைபவி சாண்டில்யா, சூர்ய நமஸ்காரம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மராத்தி மொழியில் தொடங்கிய இவரது திரைப் பயணம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நீண்டு கொண்டே போகிறது.

தமிழில் இவர் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக இரு படங்களில் நடித்துள்ளார்.

வாயில் சிகரெட்டுடன்

வாயில் சிகரெட்டுடன்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் செம கவர்ச்சியாக நடித்து மிரட்டிய வைபவி சாண்டில்யா, உள்ளாடை அணிந்து கொண்டு, வாயில் சிகரெட்டுடன் நிஷா எனும் ஜி5 வெப்சீரிஸுக்கு மிரட்டல் லுக் கொடுத்து நடித்திருந்தார். பாலிவுட் வெப்சீரிஸ்களுக்கு இணையாக கவர்ச்சி காட்டி வைபவி சாண்டில்யா அந்த வெப்சீரிஸில் மிரட்டி இருப்பார்.

நெற்றியில் கிருஷ்ணன்

நெற்றியில் கிருஷ்ணன்

மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த கேப்மாரி நடிகை தனது நெற்றியில் கிருஷ்ணனை வரைந்து, கண்களில் மயில் இறகுகளால் அலங்கரித்தபடி கொடுத்திருந்த போஸ் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹாட்டாக மட்டுமின்றி க்யூட்டாகவும் ஏகப்பட்ட போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தலை கீழாக

தலை கீழாக

செக்ஸியான உடற்கட்டை வைத்திருக்கும் அத்தனை நடிகைகளும், கடுமையான உடற்பயிற்சிகளையும், யோகாக்களையும் விடாமல் செய்து வருகின்றனர். அதனால், தான் அந்த அளவுக்கு ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் அவர்களால் இருக்க முடிகிறது. யோகாவில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

படு கிளாமராக

படு கிளாமராக

சில தினங்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம ஹாட்டாக வெறும் வெள்ளை நிற சட்டை மட்டுமே அணிந்து கொண்டு, தொடையழகு முழுவதும் தெரியும் படி போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்து இருந்தார்.

View this post on Instagram

☀️Suryanamaskar☀️ A & B

A post shared by Vaïbhavi Shandilya (@vaibhavishandilya) on

இரண்டு வகை

இந்நிலையில், தற்போது சூர்ய நமஸ்காரத்தில் இரண்டு வகை இருப்பதாகக் கூறியுள்ள வைபவி சாண்டில்யா, அழகாக அந்த இரண்டு சூர்ய நமஸ்காரங்களையும் செய்யும் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சிகப்பு நிற டீசர்ட்டையும், நீல நிற டிராக் பேன்ட்டையும் அணிந்து கொண்டு, அவர் சூர்ய நமஸ்காரம் செய்யும் அழகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X