இவ்வளவு அழகா இருந்தா வைரல் ஆகாதா?....வலிமை நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

ஐதராபாத் : அஜித் நடித்துள்ள மெகா ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். சட்ட விரோத பைக் ரேசை மையமாகக் கொண்டது தான் படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் ஆபீசர் அர்ஜுன் ரோலில் தான் அஜித் நடித்துள்ளார்.

வலிமை க்ளிம்ஸ் சாதனை

வலிமை க்ளிம்ஸ் சாதனை

சமீபத்தில் வலிமை படத்தின் ஃபஸ்ட் க்ளிம்ஸ் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ யூட்யூப்பில் இந்திய அளவில் பல சாதனைகளை முறியடித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அஜித் ரசிகர்கள் வலிமை க்ளிம்ஸ் , பட ரிலீஸ் ஆகியவற்றை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தை புகழ்ந்த நடிகை

அஜித்தை புகழ்ந்த நடிகை

இந்நிலையில் வலிமை படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள நடிகை வைஷ்ணவி சைதன்யா, அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்றை ட்விட்டரில் கடந்த மாதம் பகிர்ந்திருந்தார். அதோடு, தல சாருடன் நடிப்பதற்கு உண்மையாகவே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி. அஜித் சார் ஒரு அற்புதமான மனிதர். மிக அன்பாக, அக்கறையான மனிதர். அவர் இருக்கும் போது ஒட்டு மொத்த வலிமை செட்டே அனல் பறக்கும். தல அஜித்தின் 29 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்ட நாங்க வேற மாரி பாடலை நீங்கள் அனைவருமே என்ஜாய் செய்திருப்பீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

டிக்டாக் பிரபலம்

டிக்டாக் பிரபலம்

26 வயதாகும் வைஷ்ணவி, தெலுங்கு டிக் டாக் பிரபலம் ஆவார். டிக் டாக் மூலம் பிரபலமான இவர், டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு குறும் படங்கள் பலவற்றிலும் நடித்தார். பிறகு ஆல வைகுந்தபுரமுலு படத்தில் சூப்பர் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழில் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

வைரலாகும் ஃபோட்டோக்கள்

வைரலாகும் ஃபோட்டோக்கள்

அஜித்துடன் வைஷ்ணவி எடுத்த ஃபோட்டோக்களை வைரலாக்கிய தமிழ் ரசிகர்கள், தற்போது பல்வேறு விதமாக சேலையில் ஃபோட்டோஷுட் நடத்தி, வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஃபோட்டோக்களை வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். இந்த அழகிய ஃபோட்டோக்களால் தமிழ் ரசிகர்களின் மனதை ரொம்பவே கொள்ளையடித்து விட்டார் வைஷ்ணவி.

வைரலாகாமல் என்ன செய்யும்

வைரலாகாமல் என்ன செய்யும்

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல வைஷ்ணவி வெளியிட்டுள்ள ஃபோட்டோக்களை பார்த்து விட்டு, இவ்வளவு அழகாக இருந்தால் உங்க ஃபோட்டோக்கள் வைரல் ஆகாமல் என்ன பண்ணும் என கேட்டுள்ளனர். டிக்டாக் தடை செய்யப்பட்டதால் தற்போது இன்ஸ்டாகிராமில் டப்ஸ்மாஷ் செய்த ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்து வருகிறார் வைஷ்ணவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X