Don't Miss!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ப்பா.. இன்னாம்மா வளைந்து யோகா செய்யுறாரு நம்ம வலிமை நாயகி.. உள்ளங்களை கவரும் ஹூமா குரேஷி பிக்ஸ்!
சென்னை: நடிகர் அஜித்தின் வலிமை பட நாயகி ஹூமா குரேஷி அட்டகாசமாக வளைந்து யோகா செய்யும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பொங்கலுக்கு அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்தது.
பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், திரையரங்குகள் இந்த பொங்கலுக்கு வசூலை குவிக்க முடியாமல் திணறி வருகின்றன.
பிக்
பாஸ்
சீசன்
5
கிராண்ட்
ஃபினாலே...
அடி
தூள்
சிறப்பு
விருந்தினர்
இவரா
?

வலிமை ஹீரோயின்
பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் முன்னாள் காதலியாக நடித்திருப்பார் ஹூமா குரேஷி. இந்நிலையில், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஹூமா குரேஷி எப்படி நடித்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

தள்ளிப்போன ரிலீஸ்
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வலிமை திரைப்படம் தள்ளிப்போனது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஞாயிறு லாக்டவுன் மற்றும் இரவு ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியில் ரசிகர்கள்
இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட நினைத்த அஜித் ரசிகர்களுக்கு வலிமை படம் வெளியாகாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக படம் தள்ளி வைக்கப்பட்டது நல்ல முடிவு தான் என ரசிகர்களும் நடிகர் அஜித்தின் முடிவை ஏற்றுக் கொண்டனர். லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்டால் முதல் படமாக வலிமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூமா குரேஷி யோகா
வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில், நடிகை ஹூமா குரேஷி வில்லாக வளைந்து செய்துள்ள யோகா புகைப்படங்கள் இணையத்தை ஆட்சி செய்து வருகிறது. 4.5 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஹூமா குரேஷியின் இந்த யோகா புகைப்படங்கள் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கவர்ச்சி விருந்து
தனது வீட்டின் மொட்டை மாடியில் ஜிம் உடையை அணிந்து கொண்டு நடிகை ஹூமா குரேஷி யோகா செய்துள்ள புகைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட லைக்குகளும், ஹார்ட்டீன்களும் இந்த யோகா புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றன.

பாலிவுட்டில் பிசி
கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஹூமா குரேஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியன மஹாராணி வெப் தொடர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படத்திலும் இவர் தான் ஹீரோயின். ஹாலிவுட் படமான ஆர்மி ஆஃப் தி டெட் படத்திலும் நடித்திருந்தார். நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மோனிகா மற்றும் ஓ மை டார்லிங்கிலும் நடித்து வருகிறார் ஹூமா குரேஷி. டபுள் எக்ஸ்எல் படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார் ஹூமா குரேஷி.