இணையதளத்தை போட்டோ ஷூட்களின் மூலம் வளைத்துப் போடும் "வலிமை" ஹீரோயின்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ஜரீனா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹூமா குரேஷி.
தற்போது ஹிந்தியில் வெளியாகி உள்ள மகாராணி திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ள இவர் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.
அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஹூமா குரேஷி மாடர்ன் உடையில் மனதை அள்ளும் லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வைரல் ஆகி உள்ளார்.

ரஜினிகாந்தின் காதலியாக ஜரினா
கபாலி வெற்றியைத் தொடர்ந்து பா ரஞ்சித், ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்து திரைப்படம் காலா. மும்பையில் உள்ள தாராவி பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹூமா குரேஷி நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள இவருக்கு முதல் திரைப்படமே மிகச்சிறந்த அறிமுகப் படமாக அமைந்தது

வலிமை
காலா கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள வலிமை திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்
Recommended Video

போலீஸ் அதிகாரி வேடத்தில்
வலிமை படத்தில் ஹுமா குரேஷி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஹிந்தியில் தற்போது வெளியாகியுள்ள மகாராணி படத்திற்கு பாராட்டுகள் குவிகிறது.இவ்வாறு தொடர் வெற்றிகளின் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகை இடத்தை கைப்பற்றி இருக்கும் இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள மகாராணி திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது

செம ஸ்டைலிஷான உடையில்
பாலிவுட்டை போலவே தமிழிலும் மிக விரைவிலேயே தனி இடத்தைப் பிடிக்க இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்டை நடித்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது செம ஸ்டைலிஷான உடையில் தொடையழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை வளைத்துப்போட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











