Vanakkam thamizha: யுவன் ஷங்கர் ராஜான்னு சொன்ன உடனே ஓகேன்னுட்டேன்.. பிந்துமாதவி!

சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சி தொகுப்பை அவ்வப்போது மாற்றி வருகிறது சன் டிவி. இதில் மாறாமல் இருப்பது சிறப்பு விருந்தினர் பகுதி. இதுவும், பெண்கள் ஃபிட்னெஸ் பகுதியும் நன்றாக இருக்கிறது

இதில் டாக்டர், சினிமா பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என்று கலந்துகொண்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டு மருத்துவம் சக்தி சுப்ரமணியம் ஐயாவின் மருத்துவ குறிப்புக்கள் இப்போது இல்லை.

சித்த மருத்துவம், நாட்டு மருந்துகளின் மகத்துவத்தை சக்தி சுப்ரமணியம் ஐயாவின் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டாலும், எப்போது சன் டிவியில் வந்து அவர் பிரபலமானாரோ, அப்போது அவரது மருத்துவமனையில் வைத்தியத்தின் செலவுகள் பன்மடங்காக எகிறியது. இது தெரியுமா சன் டிவிக்கு?

விருந்தினர் பிந்து மாதவி

விருந்தினர் பிந்து மாதவி

இன்றைய சிறப்பு விருந்தினர் பகுதியில் நடிகை பிந்து மாதவி கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். கழுகு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்னு சொன்ன உடனேயே அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டேன். எப்படியாவது ஒரு படத்தை ஹிட்டாக்கி நம்மை அடையாளப்படுத்திடுவார்னு நம்பிக்கை. அதே மாதிரி எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். அதோட ஆத்தாடி மனசுதான் ரெக்கை கட்டி பறக்குதே பாட்டு எனக்கு பேர் வாங்கித் தந்தது. பேக்ரவுண்ட் மியூசிக்ல யுவன் நல்லா ஸ்கோர் பண்ணி இருப்பார் என்று கூறினார்.

விரைவில் கழுகு 2

விரைவில் கழுகு 2

இப்போது விரைவில் கழுகு 2 வெளிவர இருக்கிறது. அதற்கு நான் ரொம்ப ஆவலா காத்துகிட்டு இருக்கேன்னு சொன்னார். இன்ஜியரிங் படிக்கும்போது மாடலிங் செய்ய ஆசை வந்தது. அப்பா, அம்மாகிட்ட கேட்க பயம்.படிச்சு முடிக்க ஆறு மாசம் இருந்தப்போ, மெதுவா வீட்டில் சொன்னேன்.. சரி போயி முயற்சி பண்ணி பாரு. முடியலேன்னா வந்துருன்னு சொன்னாங்க .ஓடிவந்துட்டேன்.இப்போ சென்னையில் குடும்பமா வசிக்கற அளவுக்கு வந்திருக்கோம்னும் சொன்னார்.

பைக்கில் தல

பைக்கில் தல

தல அஜீத் கூட டேட்டிங் போக ஆசை. எங்கே வேணும்னாலும் அவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். அதுவும் அவர் கூட பைக்கில் கட்டிப் பிடிச்சுக்கிட்டு லாங் டிரைவ் போக ஆசை என்றார். இது விளையாட்டு டாஸ்க்கில் சொன்னது. .அப்பாவாக விஜயகாந்த் நடித்தால் அவருக்கு மகளாக நடிக்க ஆசைதான். கம்பீரமான அப்பா கேப்டன் விஜயகாந்த்னா யாருக்குத்தான் நடிக்க புடிக்காதுன்னும் அதே டாஸ்க்கில் வந்த புகைப் படத்தைப் பார்த்துட்டு சொன்னார்.

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

நடிகை சில்க் ஸ்மிதா சாயலில் இருக்காங்கன்னு இவர் நடிக்க வந்த புதிதில் எல்லோரும் சொன்னார்கள். அப்போது அது எனக்கு பெருமைதான்.சில்க் ஒரு சூப்பர் நடிகை.அவரை மாதிரி நான் இருப்பதை நினைச்சு நான் பெருமைப் படுகிறேன் என்றும் சொல்லி இருந்தார்.பிந்து மாதவி பிக் பாஸ் முதல் சீசனில் ஹவுஸ் மேடாக ஒருந்தவர் என்பதும், ஆதற்குப்பிறகுதான் கழுகு 2 வில் நடித்து தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார் என்பதும் குறிப்பிட வேண்டியது..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X