காஞ்சனா பாணியில்.. ஏர் ஹோஸ்டஸாக இருந்து நடிகையான வாணி போஜன்
சென்னை: முன்பு நடிகை காஞ்சனா ஏர் ஹோஸ்டஸாக இருந்து பின்னர் நடிகையாகி முத்திரை பதித்தார். அதே பாணியில் இப்போது விமானப் பணிப் பெண்ணாக இருந்து வாணி போஜன் நடிகையாகியுள்ளார்.
விமான பணிப்பெண்ணாக இருந்து மாடலிங் மற்றும் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை வாணி போஜன். தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்து விட்டார்.

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் வாணி போஜன் . சின்னத்திரையில் தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் தமிழ் குடும்பங்கள் அனைவரின் மனதிலும் நின்றவர் தான் வாணி போஜன். இவரை வாணி போஜன் என்றால் யாருக்கும் அதிகம் தெரியாது. சத்யா என்றால் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அனைவரும் அறிவர்.

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரை சென்றவர்கள் அதிகம். அதில் ஒருவர் தான் வாணி போஜன் தமிழ் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்த போதே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தன. சீரியல்கள் மற்றும் நிறைய கமிட்மென்ட்ஸ் இருந்ததால் வேண்டாம் என்று ஒதுக்கினார்.

பின் சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு பட வாய்ப்பு ஒன்று வந்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார். பின் தமிழில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் படத்தில் வாணி போஜனும் நடிக்கிறார்.

வாய்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதால் அடிக்கடி போட்டோஷுட்கள் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையை கலக்க போகிறார் வாணி என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











