என்ன இப்படி கிளம்பிட்டாங்க வாணி போஜன்... தெய்வமகளின் அட்டகாசமான புகைப்படங்கள்
சென்னை : டிவி பிரபலமாக இருந்த வாணி போஜன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவரது தெய்வமகள் தொடர் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது.
தற்போது திரைப்படங்களில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார்.

நடிகை வாணி போஜன்
நடிகை வாணி போஜன் சிறப்பான திரைப்படங்களில் தன்னுடைய கேரக்டருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் அழுத்தமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். நீண்ட காலங்களாக ஒரே மாதிரியான தோற்றத்தில் காணப்படுகிறார்.

தெய்வமகள் தொடர்
முன்னதாக இவரது தெய்வமகள் தொடர் இவருக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. சத்யா என்ற கேரக்டரில் அந்த தொடரில் நடித்து இருந்தார். அந்த தொடர் அவருக்கு சிறப்பான பெயரை மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.

வலிமையான கேரக்டர்
5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொடரில் அவர் நடித்திருந்தார். மிகவும் வலிமையான அந்த கேரக்டரில் அவர் நடித்து ஏராளமான ரசிகர்களை மட்டுமின்றி நல்ல விமர்சனங்களையும் பெற்றிருந்தார்.

திரையில் கவனம்
தற்போது அந்த கேரக்டர் கொடுத்த புகழில் திரையிலும் கால் பதித்துள்ளார். தமிழில் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்த படம் இவருக்கு சிறப்பாக அமைந்திருந்தது. முன்னதாக அசோக்செல்வன் உடன் நடித்திருந்த ஓ மை கடவுளே படமும் வாணி போஜனுக்கு சிறப்பாக கை கொடுத்தது. ட்ரிபிள்ஸ், லாக்கப் உள்ளிட்ட படங்களும் சிறப்பாக அமைந்தது.

சமூக வலைதளங்களில் பிஸி
சமூக வலைதளங்களிலும் வாணி போஜன் சிறப்பாக பிஸியாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது புதிய போட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்களில் அவரது அழகு அள்ளுகிறது. ரசிகர்கள் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video

இயற்கைப் பின்னணியில் புகைப்படங்கள்
இந்நிலையில் தற்போது அவர் காடு மலை என கிளம்பி விட்டார். இயற்கை பின்புலத்தில் அவர் தற்போது புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது அவர் அழகா இயற்கை அழகா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications











