நான் அரசியலுக்கு வந்தால்? நிச்சயம் அதை செய்வேன்..நடிகை வாணி போஜன் பேச்சு!
சென்னை: நடிகை வாணி போஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில்,இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், செங்களம் வெப்சீரிஸ் வெளியான சமயத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள், அரசியலுக்கு வருவதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. அதே சமயம் பெண்கள் அரசியலுக்கு வந்தால் மட்டும் அதை ஏன் பெரிய விஷயமாக பேசுகிறார்கள்? என்றார்.
சின்னத்திரையில் அறிமுகமானாலும் தற்போது வெற்றித்திரையில் ஓரளவுக்கு பெயர் சொல்லும் நடிகையாக கலக்கி வருகிறார் நடிகை வாணி போஜன். அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் வாணி போஜன் அஞ்சாமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சுப்புராமன் இயக்கி உள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் மூலமாக எஸ்.ஆர். பிரபு வெளியிட்டுள்ளார்.

நடிகை வாணி போஜன்: இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், இயக்குநர் இந்த படத்தின் கதையை என்னிடம் கூறும் போது,சின்ன பசங்களுக்கு அம்மாவாக தான் நடிக்கிறீர்கள் என்று தான் சொன்னார். ஆனால், எனக்கு மகனாக நடித்த கிருத்திக்கை பார்த்தால், அவர் என்னை விட பெரியவனாக இருந்தார். இடைவேளை வரை கதை சொன்ன இயக்குநர் மீதிக்கதையை என்னிடம் சொல்லவே இல்லை. நான் பலமுறை கேட்டும் அவர் சொல்லவில்லை, படப்பிடிப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்றார். அப்போதும் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்,அப்போது,இடைவேளைக்குப் பிறகு கதை எப்படி போகும் என நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அதனால் இடைவேளைக்குப் பிறகு கதை என்னவாக இருக்கும் என்று ஆர்வம் அதிகமானது.
மிஸ் பண்ணி இருப்பேன்: இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா என்று அனைவரும் கேட்டார்கள். கதையில் அம்மாவாக நடிப்பது, பாட்டியா நடிப்பது என்பதெல்லாம் முக்கியம் இல்ல, கதை தான் முக்கியம், ஆனால் இந்த திரைப்படத்தில் நான் நடிக்காமல் இருந்திருந்தால் மிகவும் மிஸ் செய்து இருப்பேன் என கூறினார். அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் விதார்த் நடிக்கிறார் என்று தெரிய வந்ததுமே நிச்சயமாக அவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் இன்னும் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை அதிகமானது.
அரசியலுக்கு வருவீர்களா: செங்களம் வெப்சீரிஸ் வெளியான நேரத்தில் பலர் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதுபோது, ஆமாம் என்றேன்.ஆனால் என் அப்பா எதற்காக ஆமானு சொன்னாய் என்று பதறி போனார். இதையே ஒரு ஆண் சொன்னால், அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் இப்படி சொன்னால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.அதுவே என்னை பல இடங்களில் ஆமாம் என்று சொல்வதற்காக தூண்டுகிறது. நல்லது பண்ண வேண்டும் என நினைக்கும் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் இலவச கல்வியை தான் முதலில் கொண்டு வருவேன் என்றார்.
கண்கலங்கினேன்: தொடர்ந்த பேசிய வாணி போஜன், இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு இயக்குனர்பட்ட கஷ்டங்களை பார்த்து நானே, கண் கலங்கினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் அடுத்தடுத்த படங்களில் நடிப்போம் சம்பளமும் உயரும். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அதிகம் கஷ்டப்பட்டார் என்று வாணி போஜன் பேசினார். இப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், இப்படம் நேற்று பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டது. இப்படத்திற்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











