துபாய் காலிங்... முடிஞ்சா அங்க பாக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!

சென்னை: பிரபல நடிகை துபாய் காலிங் முடிந்தால் அங்கு சந்திப்போம் என பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் திரைத்துறையில் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.

தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தாலும் தொழிலில் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாதவர் நடிகை வனிதா.

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக் கோழியாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜயகுமார், அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பெரும் பிஸியானார். அதே நேரத்தில் சமையலுக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வந்தார் வனிதா விஜயகுமார்.

வனிதா மூன்றாவது திருமணம்

வனிதா மூன்றாவது திருமணம்

அப்போது தான் விஷுவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவருடன் வனிதாவுக்கு காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம், ஒரு காதல் தோல்வி, மூன்று குழந்தைகள் என இருந்த வனிதா மூன்றாவது திருமணம் செய்தது பெரும் பேசு பொருளானது.

 உறவை முறித்துக்கொண்ட வனிதா

உறவை முறித்துக்கொண்ட வனிதா

ஆனால் அந்த மூன்றாவது திருமணமும் வனிதாவுக்கு கை கொடுக்கவில்லை. பீட்டர் பால் மதுவுக்கு அடிமையாகி விட்டார், தன்னை விட குடியின் மீது தான் அவருக்கு அன்பு அதிகம் என்று கூறி பீட்டர் பாலுடனான உறவை முறித்துக் கொண்டார் வனிதா. அதனை தொடர்ந்து படங்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் என கவனம் செலுத்தி வந்தார்.

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

ரம்யா கிருஷ்ணனுடன் மோதல்

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. அந்த நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக பங்கேற்று நடனமாடி வந்தார் வனிதா. ஆனால் தனது ஒரு பர்ஃபாமன்ஸ்க்காக நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணன், தனக்கு குறைந்த மதிப்பெண்கள் வழங்கியதாக நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

கெட்ட வார்த்தை பேசிய வனிதா

கெட்ட வார்த்தை பேசிய வனிதா

மேலும் ரம்யா கிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்தார் நடிகை வனிதா விஜயகுமார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பேசிய நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான நகுல், வனிதா தங்களை செட்டில் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் நகுல்.

கிளாமர் போட்டோ ஷூட்

கிளாமர் போட்டோ ஷூட்

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனிதா, சினிமாவில் பிஸியாக உள்ளார். சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ள வனிதா விஜயகுமார், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கிளாமராகவும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் வனிதா.

துபாய் காலிங்

துபாய் காலிங்

இந்நிலையில் நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, துபாய் அழைக்கிறது.. ஏதோ ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளேன்.. நீங்கள் துபாயில் இருந்தால் சந்திக்கலாம்.. விரைவில் வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் டீம்மின் கேப்டன்?

ஐபிஎல் டீம்மின் கேப்டன்?

அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், துபாய் போறீங்களா? அப்போ நீங்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையா என கேட்டு வருகின்றனர். மேலும் ஐபிஎல் போட்டியில் எந்த டீம்மின் கேப்டனாக களமிறங்க போகிறீர்கள் என கேட்டு கலாய்த்து வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் எப்போது துபாய் வருகிறீர்கள் உங்களை காண காத்திருக்கிறேன் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X