மெசேஜ் அனுப்புவது.. பார்ப்பது பிடிக்காது… வனிதா ஹரிஹரன் பேட்டி!

சென்னை : எனக்கு மெசேஜ் அனுப்பவே பிடிக்காது, அதனால் நான் யார் மெசேஜையும் பார்க்கவே மாட்டேன் என்று வனிதா ஹரிஹரன் கூறியுள்ளார்.

நடிகை வனிதா ஹரிஹரனை நாம் அதிக படியாக நாடகங்களில் பார்த்திருப்போம். இதனை தாண்டி தமிழில் செஞ்சிட்டாலே என் காதல படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

Vanitha Hariharan does not like to send a message on the phone

சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வனிதா தந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இவர் தமிழில் தெய்வமகள் நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் மேலும் கல்யாணம் முதல் காதல் வரை. பொன்னூஞ்சல் , பகல் நிலவு மற்றும் தலையணை பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்து வருகிறார் .

தற்போது அளித்த நேர்காணலில் நான் மற்றும் கணவர் இருவருமே செல்லபிராணிகள் விரும்பிகள் நான் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை நான் அதிகமாக பதிவிடுவது செல்லப்பிராணிகள் பற்றி தான் அதிகமாக பதிவிட்டு இருக்கிறார்.

Vanitha Hariharan does not like to send a message on the phone

மேலும் தனக்கு பிடித்த நடிகை தீபிகா படுகோனே என்று கூறியுள்ள அவர், அவரை ஏன் பிடிக்கும் என்றால், அவர் ரொம்ப சாதாரணமான எதார்த்தமான ஆடைகளை உடுத்துவதால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அவரின் சமூக வலைத்தள பக்கத்தை அடிக்கடி சென்று பார்த்துகொள்வேன் என்றும் கூறினார். முக்கியமாக தீபிகா படுகோனேவின் கன்னக்குழி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார் .

மேலும் வெளியில் சொல்லாத அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு முறை தன்னை ஒரு பையன் கிண்டல் செய்து கொண்டே வந்ததாகவும் அவனிடம் ரௌத்திரமாக செருப்பை காட்டினேன், ஆனால் அந்த பையன் செருப்ப தூக்கி கூவத்துல போட்டுடான். அதுக்கப்பறம் ஒத்த செருப்போட வீட்டுக்கு நடந்தே போனேன் என்று நகைச்சுவை ததும்ப கூறினார் .

Vanitha Hariharan does not like to send a message on the phone

மேலும் தனக்கு தொலைப்பேசியில் மெசேஜ் அனுப்ப அவ்வளவாக பிடிக்காது, அதனால் நான் யார் மெசேஜையும் பார்க்கவே மாட்டேன். கிட்டதட்ட 83ஆயிரம் மெசேஜை நான் இன்னும் பார்க்கவே இல்லை என்று கூறினார். எனக்கு யாரும் மெசேஜ் பண்ணி தப்பாக நடந்து கொண்டதெல்லாம் கிடையாது. நான் மெசேஜ் பாக்க மாட்டேன் எனக்கு அது பிரச்சினை கிடையாது என்று ஆனந்தமாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X