வனிதாவின் காதல்களும் கல்யாணங்களும்!

By Shankar

கோடம்பாக்கத்தில் அதிக பரபரப்பு கிளப்பியவர்களில் ஒருவர் வனிதாதான்.

திருமணமாகட்டும், குழந்தைக்கு உரிமை கோருவதிலாகட்டும், பெற்ற அம்மா அப்பாவின் இன்னொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதிலாகட்டும், அனைத்தையும தடாலடியாக செய்து முடித்தவர் வனிதா.

மாணிக்கம்

மாணிக்கம்

அரண்மனை கிளி படம் மெகா ஹிட்டாகி, ராஜ் கிரண் உச்சத்திலிருந்த நேரம் அது. அப்போதுதான் விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவை நடிகையாக களமிறக்கினார்கள். அப்பது 9வதுதான் படித்துக் கொண்டிருந்தாராம் வனிதா. மாணிக்கம் படத்தில், தனக்கு அப்பா போன்ற தோற்றத்திலிருந்த ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார் வனிதா.

தோல்வி

தோல்வி

ஆனால் மாணிக்கம் படு சொதப்பலாக முடிந்தது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான கார்த்திக் ராஜாவும் எடுபடாமல் போனார்.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

அடுத்து விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார் வனிதா. அந்தப் படமும் படுதோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து வனிதாவுக்கு வாய்ப்புகளே இல்லாமல் போயின.

ஆகாஷுடன் முதல் திருமணம்

ஆகாஷுடன் முதல் திருமணம்

இதைத் தொடர்ந்து அப்போது டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் காதல் ஏற்பட்டு அது கல்யாணத்தில் முடிந்தது. இருவருக்கும் பிறந்த குழந்தைதான் ஸ்ரீஹரி.

முறிவு

முறிவு

ஆனால் இவர்களின் தாம்பத்யம் அதற்கு மேல் நீடிக்க வில்லை. கருத்து வேறுபாடு என்ற பொதுவான காரணம் சொல்லி பிரிந்தார்கள். நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்கள்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்த நிலையில், வனிதா, தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பரபரப்பு கிளப்பிய வனிதா

பரபரப்பு கிளப்பிய வனிதா

இந்தத் திருமணம் காரணமாக, மூத்த மகன் ஸ்ரீஹரி வனிதாவை விட்டுப் பிரிந்து, முதல் கணவர் ஆகாஷூடன் தங்கிவிட்டான். பின்னர் இதற்காக வனிதா நடத்திய ஆர்ப்பாட்டங்களெல்லாம் நினைவிருக்கலாம். முதல் கணவர் மூலம் பிறந்த அந்த குழந்தை மீண்டும் தன்னிடம் வரவேண்டும் என தனது இரண்டாவது கணவருடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தினார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இதில் இரண்டாவது கணவருக்கும் வனிதாவுக்கும் கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தார்கள். மகன் ஸ்ரீஹரி தனக்கு கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்த வனிதா, மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.

குண்டு வனிதா மெலிந்தார்

குண்டு வனிதா மெலிந்தார்

இதற்கிடையில், வனிதா தனது குண்டு உடம்பை ஸ்லிம்மாக்கி சினிமாக்காரர்களை வியக்க வைத்தார். தனது ஸ்லிம் பட ஆல்பத்தைக் காட்டி சினிமா வாய்ப்புகளுக்கும் முயற்சித்து வந்தார்.

மூன்றாவது திருமணம்?

மூன்றாவது திருமணம்?

இந்த நிலையில், இப்போது அவருக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர். நடிகை அல்போன்சாவின் தம்பிதான் இந்த ராபர்ட். வனிதா - ராபர்ட் தங்கள் உறவை நட்பு என்று இப்போது கூறினாலும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X