ஷகீலா பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார்.. போஸெல்லாம் தாறுமாறா இருக்கே!
சென்னை: நடிகை ஷகீலாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. கவர்ச்சி கன்னியாகும். ஆபாச படங்களிலும் நடித்து வந்தவர் நடிகை ஷகீலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா இந்த ஆண்டு நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். நடிகை கிரண் மற்றும் ஷகீலா தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் கிரண் வெளியேறிய நிலையில், ஷகீலா சில வாரங்கள் தாக்குப் பிடித்தார். தனது புகைப்பழக்கம் பற்றியெல்லாம் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பினார். இந்நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் அவரது தோழிகளுடன் ஷகீலா இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் ஷகீலா: ஆரம்பத்தில் காமெடி நடிகையாக சில படங்களில் நடித்த ஷகிலா பிரபலமானதே மலையாளத்தில் அவர் நடித்த அடல்ட் படங்கள் மூலமாகத்தான். ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகீலா விஜய் நடித்த அழகிய தமிழ் மகன், ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். கவர்ச்சி நடிகை என்கிற தனது இமேஜை டோட்டலாக தற்போது ரியாலிட்டி ஷோ பக்கம் திரும்பி மாற்றி விட்டார்.

ரியாலிட்டி ஷோ பக்கம்: விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் ஷகீலா. இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஷகிலா வருவார் என பல சீசன்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வனிதா விஜயகுமாருடன் பார்ட்டி: இந்நிலையில் ஷகீலா அக்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் என வீட்டில் செம கேஷுவலாக கலர் கலர் நைட் டிரெஸ் அணிந்து கொண்டு எடுத்த போட்டோக்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அதிகளவில் பார்ட்டியில் ஈடுபட்டு வருகிறாரே வனிதா விஜயகுமார் என ரசிகர்கள் கஎம்ண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











