அவன் ஐசியூவில் இருந்தான்.. நர்ஸ் வந்து அப்படி சொன்னப்போ.. மகன் குறித்து எமோஷனலான வனிதா விஜயகுமார்
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்துவரும் அவர் சமீபத்தில் தனது பிள்ளைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன.
அநீதியில் ரீ என்ட்ரி: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.

சர்ச்சையான திருமணங்கள்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்தார். கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
வனிதாவின் பேட்டி: வனிதா விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது மகன் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "என்னுடைய மூன்று குழந்தைகளையும் நான் கைகளில் வாங்கிய தருணம் ரொம்பவே ஸ்பெஷலானது. அதிலும் எனது மகன் ஸ்ரீஹரி பிறக்கும்போது அவனுக்கு கொடி சுத்திவிட்டது. அதனால் அவசரம் அவசரமாக அவனை வெளியே எடுத்தார்கள். அவன் பிறந்தபோது எனக்கு 19 வயதுதான் நடந்துகொண்டிருந்தது. அவர் குறித்த நாளுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டான்.
ஐசியூவில் இருந்தான்: நான் கண்கள் விழித்ததும் உங்கள் பையன் ஐசியூவில் இருக்கிறான் என்று சொன்னார்கள். அது எனக்கு பயத்தை கொடுத்துவிட்டது. அதனையடுத்து அவனுக்கு பால் கொடுப்பதற்காக அழைத்து சென்றார்கள். அப்போது இந்த உலகத்தில் இதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமே இல்லை என்று எனக்கு தோன்றியது. நான் எனது அக்கா பிள்ளைகளை தூக்கி வளர்த்திருந்தாலும் என்னுடைய பிள்ளையை தூக்குகிறேன் என்று உணர்ந்தபோது நான் கண்கள் கலங்கிவிட்டேன். ஒருமுறை அவனுக்கு பால் கொடுத்தபோது தூங்கிவிட்டான்.
டக்குனு பிடிச்சிட்டான்: அப்போது அவனிடம் உனக்கு உண்மையாகவே என்னை பிடித்திருக்கு என்றால் என் விரலை பிடித்துக்கொள். இல்லையென்றால் என்னை விட்டுவிடு என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் மகனை தூக்குதவற்காக நர்ஸ் வந்தார். அப்போது என்ன நினைத்தானோ தெரியவில்லை டக்கென்று என் விரல்களை பிடித்துவிட்டான். அப்போதிருந்தே நாம் பேசுவது அனைத்தும் அவனுக்கு புரிகிறது என்று தெரிந்துகொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











