வனிதா விஜயகுமாருக்கு டிசைன் டிசைனா பிரச்சனை.. போலீஸுக்கு சென்ற புகார்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. இவர் சினிமாவில் ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். நடிக்கும்போது அவருக்கு வந்த பிரபல்யத்தைவிடவும் அவரது பெர்சனல் வாழ்க்கையில் நடந்த பிரச்னைகள் அவரை லைம் லைட்டில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. முதலில் திருமண சர்ச்சையை சந்தித்தவர்; அடுத்ததாக பிக்பாஸில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமானார். தற்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளில் நடிகை மஞ்சுளா இரண்டாவது மனைவி. அவருக்கு பிறந்தவர் வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்த வனிதா அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். வனிதாவின் மகன் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

திருமண சர்ச்சை: முதல் திருமண வாழ்க்கை கசந்ததன் காரணமாக அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார் வனிதா. அடுத்ததாக இன்னொரு திருமணத்தை செய்துகொண்ட அவர் அதிலிருந்தும் வெளியே வந்தார். இரண்டு திருமண முறிவுகளுக்கு பிறகு நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் நீண்ட தூரம் பயணிக்காத சூழலில் கடைசியாக பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதிலிருந்தும் வெளியே வந்தார்.
குடும்பத்துடன் பிரச்னை: சூழல் இப்படி இருக்க தனது தந்தை விஜயகுமாருடனும் வனிதாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னைக்கு சொத்துதான் காரணம் என ஒரு தரப்பினரும்; இல்லை வனிதாவின் திருமண சர்ச்சைகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் வனிதாவை விஜயகுமாரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து ஒதுக்கிவைத்தே வருகிறார்கள். இவர்களுக்குள்ளான பிரச்னை பல முறை பூதாகரமாகி கோடம்பாக்கத்தின் தலைப்பு செய்தியாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படம்: இப்படிப்பட்ட சூழலில் பிக்பாஸில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே எலிமினேட் ஆன அவர் அநீதி படத்தில் நடித்தார். தற்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். படத்தினை வனிதாவின் மகளும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான ஜோவிகா தயாரித்திருக்கிறார். படத்திலிருந்து ஒரு சிங்கிள் சமீபத்தில்தான் வெளியானது.
புதிய பிரச்னை: இந்நிலையில் சாட்டிலைட் உரிமைக்காக 40 கோடி ரூபாய்க்கான காசோலை கொடுத்து வனிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக தன்ராஜ் என்பவர் காவல் துறையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வனிதாவோ, 'தன்ராஜ் என்கிறவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனது கையெழுத்தை அவர் போலியாக பயன்படுத்தி வழக்கை தொடர்ந்திருக்கிறார்' என்று புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தை பார்த்த ரசிகர்களோ, வனிதாவுக்கு மட்டும் எப்படி டிசைன் டிசைனா பிரச்னை வருது என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











