40 கல்யாணம் செய்வேன்.. அசிங்கப்படுத்தாதீங்க.. பெண்கள் குற்றம் பண்றதில்லையா?.. வனிதா விஜயகுமார் பளீச்

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாக்களில் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் மிஸஸ்&மிஸ்டர் என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடிக்க; வனிதாவின் மகள் ஜோவிகாதான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். அவர்களில் நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர்தான் வனிதா. தந்தை வழியில் சினிமாவில் அறிமுகமான அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர்; அவரது அப்பா மாதிரி பெரிய ஸ்டாராக வர முடியவில்லை. இருப்பினும் அவர் சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று முயன்றுகொண்டுதான் இருந்தார்.

திருமணங்கள்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் முதலில் அவர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனை பெற்றார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பாதியில் முடிந்தது. இதனால் வனிதாவுக்கும் விஜயகுமார் மற்றும் குடும்பத்துக்கும் இடையே பிரச்னை உருவாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆகாஷை பிரிந்த அவர் அடுத்ததாக தொழிலதிபரை திருமணம் செய்தார். அந்தத் திருமணம் பாதியில் முடிந்து ராபர் மாஸ்டருடன் பழகி; அவரையும் பிரிந்து கடைசியாக பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் வனிதா: இதற்கிடையே ஒருபக்கம் திருமண சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அதிலும் தனது அடாவடி செயல்களால் கவனம் ஈர்த்த அவர் நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறினார். அங்கிருந்து வந்த பிறகு அநீதி படத்தில் நடித்த அவர் அடுத்ததாக அந்தகன் திரைப்படத்தில் நடித்தார். இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கும் அவர் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vanitha Vijayakumar has said that she will perform 40 marriages

Mrs&Mr திரைப்படம்: அதன்படி அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் வனிதா இயக்கியிருக்கும் படம் மிஸஸ்&மிஸ்டர். அதில் அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியான ஒரு போஸ்டரை வைத்து அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சுக்கள் எழ ஆரம்பித்துவிட்டன. அந்தப் படமானது மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அலெர்ட் திரைப்படம்: அதாவது அலெர்ட் என்ற படத்தின் படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், " நான் 40 திருமணங்கள்கூட செய்வேன்.இன்னும் நான்குகூட செய்யவில்லை. எனனி அசிங்காப்படுத்தீங்க. நான் இத்தனை திருமணங்கள் செய்துகொள்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை என்றுதான் தெரியவில்லை.அலெர்ட் திரைப்படம் பெண்களுக்கான படம் என்று சொன்னார்கள்.

பெண்கள் தவறே செய்யவில்லையா?: பெண்களே தவறு செய்தால் அவர்களுக்கும் தண்டனை இருக்கிறது. பெண்கள் என்றால் சில அட்வான்டேஜ்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சிலர் அதை மிஸ் யூஸ் செய்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பெண்கள் எந்தத் தவறுமே செய்வதில்லையா?.. பெண்களை உயர்த்தியே காண்பித்துக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் அவர்கள் செய்யும் தவறையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதற்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X