பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுது.. மீண்டும் கரன்சி மாலையில் வனிதா அக்கா.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: நடிகை வனிதா கரன்சி மாலையில் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். குமரி ஆன பிறகும் பல படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு திருமணம் குழந்தைகள் என செட்டிலான வனிதா சினிமாவில் அதிகம் தலைக்காட்டாமல் இருந்தார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

இருப்பினும் அவ்வப்போது குடும்பத்தகராறு, விவாகரத்து என அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா.

சினிமாவில் பிஸி

சினிமாவில் பிஸி

இதன் மூலம் மீண்டும் பிரபலமான வனிதாவுக்கு சின்னத்திரை வாய்ப்புகளும் வெள்ளித்திரை வாய்ப்புகளும் குவிந்தன. தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகள் சினிமா என பிஸியாக உள்ளார் வனிதா.

போட்டோக்கள் வெளியிடுவது..

போட்டோக்கள் வெளியிடுவது..

அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் வனிதா.

தெறிக்கும் இணையம்

தெறிக்கும் இணையம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் காளி வேடமிட்டு வனிதா ஷேர் செய்த போட்டோ பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

கரன்சி மாலையில்

கரன்சி மாலையில்

அதாவது நடிகை வனிதா விஜயகுமார் கரன்சி மாலையில் காட்சி கொடுத்துள்ளார். வீட்டில் லக்ஷ்மி குபேர பூஜை நடத்தியுள்ளார். தனது மகள் ஜோவிகாவுடன் பூஜையில் பங்கேற்றுள்ளார் நடிகை வனிதா.

வளர்ந்துவிட்ட ஜோவிகா

வளர்ந்துவிட்ட ஜோவிகா

இருவரும் ரூபாய் நோட்டுகள் மாலையுடன் உள்ள போட்டோவை நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் ஜோவிகா வனிதாவை விட ஹைட்டாக உள்ளார்.

 இப்படி வளர்ந்துட்டாரே..

இப்படி வளர்ந்துட்டாரே..

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஜோவிகா என்ன இப்படி வளர்ந்துவிட்டார் என வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டும் இதே பூஜையை நடத்தினார்.

பீட்டர் பாலுடன் பூஜை

பீட்டர் பாலுடன் பூஜை

அப்போது தனது மூன்றாவது கணவரான பீட்டர் பால் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பங்கேற்றார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X