ஜொலி ஜொலிக்கும் வைர நகை… மணப்பெண்ணாக மாறிய வனிதா… வைரல் போட்டோஸ் !
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மணப்பெண் போல வைரநகைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா, தினமும் ஒரு புகைப்படத்தை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வசந்த பாலனின் பெயரிடப்படாத திரைப்படத்திலும்,பவர் ஸ்டாருடன் பிக்அப் ட்ராப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

விஜயகுமாரின் மூத்த மகள்
பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

பிக் பாஸ்
தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

யூடியூப் சேனல்
வனிதா விஜயகுமார், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர், பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மணப்பெண் கோலத்தில்
அந்த வகையில் தற்போது திநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான வைர நகைகளை அணிந்து கொண்டு மணப்பெண் போலவே மாறியுள்ளார். தி நகர் மற்றும் தாம்பரத்தில் மிக பிரம்மாண்டமான செயல்பட்டு வரும் கடை தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.


Click it and Unblock the Notifications











