தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. வனிதா விஜயகுமார் வலியுறுத்தல்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். சில படங்களில் நடித்த அவர் சினிமாவிலிருந்து காணாமல் போனார். அதற்கு பிறகு தனது வீட்டோடு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவ்வப்போது வெளியே தெரிந்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸுக்கு பிறகு அநீதி, அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவரது மகள்களில் வனிதாவும் ஒருவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். வீட்டுக்குள் அவர் பேசிய ஒவ்வொரு விஷயமும் தடாலடியாகவே இருந்தது. அதேபோல் தான் கலந்துகொள்ளாத பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தனது யூட்யூப் சேனலில் விமர்சனம் செய்கிறார். இப்படி ஒருபக்கம் பிஸியாக இருக்கும் அவர் படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் அநீதி, அந்தணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மகள் ஜோவிகா: இதற்கிடையே வனிதாவின் திருமண விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் இப்போது பிரபு சாலமனின் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மகள் ஜோவிகாவும் பிக்பாஸின் கடந்த சீசனில் கலந்துகொண்டார். அவரும் திரைத்துறையில் இப்போது களமிறங்கியிருக்கிறார்.
பாதியில் முடிந்த திருமண உறவு: ஆகாஷை பிரிந்த வனிதா; இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவும் பாதியில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. கிறிஸ்தவ முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் பங்கேற்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் அச்சமயத்தில் மிகப்பெரிய ட்ரெண்டானது என்பது நினைவுகூரத்தக்கது. மூன்றாவது திருமண உறவும் பாதியில் முடிந்தது.
Mrs & Mr: பீட்டர் ரொம்பவே குடித்ததால்தான் வனிதா வெளியேறியதாக சிலர் சொல்கிறார்கள். இந்தச் சூழலில் ராபர்ட்டுடன் சேர்ந்து மிஸஸ் அண் மிஸ்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜோவிகா தயாரிக்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், "திரைத்துறையில் மொழியை விடவும் திறமையைத்தான் முதன்மையாக கருத்தில் கொள்ள வேண்டும். திரையுலகில் பல ஊமை படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
தமிழ் நடிகைகள்: சார்லி சாப்ளின் ஊமை படங்களை கொடுத்தே வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாட்டில் திறமையான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு குறைவாகவே வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழ் ஹீரோயின்கள் மட்டுமே நடிக்கக்கூடிய பல படங்கள் வர வேண்டும்.தமிழ் நடிகைகளுக்கு அதிக கவனம் வழங்க வேண்டும்.கோலிவுட்டில் பிற மொழி கதாநாயகிகள்தான் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே காணவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











