போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்து முடிந்திருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்னர் நான்காவது திருமணம் பற்றி பேசியிருந்தார். தற்போது அதனை எப்படி செய்வேன் என்பது குறித்து சொல்லியிருக்கிறார்.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இதனால் வனிதா மீது தொடர்ந்து சர்ச்சை வாசம் அடித்துக்கொண்டே இருக்கும்.

பிக்பாஸ் வனிதா: இந்தச் சூழலில் அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.
வசந்தபாலனின் அநீதி: அந்தப் படங்களில் ஒன்று அநீதி. வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் , துஷாரா விஜயன் உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸான படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக வனிதா விஜயகுமாரின் நடிப்புக்கும் ரசிகர்களிடையே டீசண்ட்டான வரவேற்பே கிடைத்தது. மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வனிதாவின் திருமணம்: இதற்கிடையே வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
நான்காவது திருமணம்: நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் தனது நான்காவது திருமணம் பற்றி பேசியிருந்தார். அதாவது நான்காவது திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று ஹார்ட் எமோஜியுடன் தெரிவித்திருந்தார். உடனே அவர் விரைவில் திருமணம் செய்துகொள்வவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இதுதான் ஐடியா: அதற்கு பிறகு அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துவரும் வனிதாவிடம் ஒரு ரசிகர், எப்போது நான்காவது திருமணம்? எங்களையும் கூப்பிடுங்க என்று கேட்டதற்கு, போஸ்டர் அடித்து நியூஸ் கொடுப்பேன். தமிழ்நாட்டையே இன்வைட் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பதில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











