For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீரென மதம் மாறியது ஏன்?...ரகசியத்தை உடைத்த வனிதா விஜயக்குமார்

  |

  சென்னை : பிக்பாஸ் அல்டிமேட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்து அனைவரையும் அலற விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட வனிதா விஜயக்குமார் திடீரென மதம் மாறியதாக அறிவித்து, அடுத்த பரபரப்புக்கு தயாராகி விட்டார்.

  நடிகர் விஜயக்குமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இரண்டு படங்கள் நடித்ததுமே காணாமல் போன வனிதா, பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் சில ஆண்டுகளிலேயே முதல் கணவருடன் பிரச்சனை, விவாகரத்து, இரண்டாவது திருமணம் என பரபரப்பில் சிக்கினார்.

  ராஜமெளலி மேல் பயங்கர ஆத்திரத்தில் உள்ளாரா ஆலியா பட்? திடீர்னு அப்படி பண்ணிட்டாரே!ராஜமெளலி மேல் பயங்கர ஆத்திரத்தில் உள்ளாரா ஆலியா பட்? திடீர்னு அப்படி பண்ணிட்டாரே!

  சர்ச்சை எனக்கு சர்க்கரை பொங்கல்

  சர்ச்சை எனக்கு சர்க்கரை பொங்கல்

  விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 3 என போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவராக மாறினார் வனிதா. இரண்டாவது கணவர் வனிதா மீது கொடுத்த போலீஸ் புகார், அப்பா விஜயக்குமாருடன் பிரச்சனை என இருந்தவர் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருந்தார் வனிதா. மூன்றாவது திருமணத்திலும் பிரச்சனை ஏற்பட்டு, சர்ச்சையில் சிக்கினார்.

  40 கல்யாணம் கூட பண்ணுவேன்

  40 கல்யாணம் கூட பண்ணுவேன்

  சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்த வனிதா, பவர்ஸ்டாருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களால் அவருக்கு நான்காவது திருமணம் நடைபெற்றதா என கிசுகிசுக்கப்பட்டது. கிசுகிசுக்கள் போதாது என்று, நான்கு என்ன நாற்பது கல்யாணம் கூட பண்ணுவேன் உங்களுக்கு என்ன பிரஸ்மீட்டிலேயே பேசி விவகாரம் ஆக்கினார் வனிதா.

  ஸ்லிம்மான வனிதா

  ஸ்லிம்மான வனிதா

  பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் சண்டை போட்டு பாதியிலேயே வெளியேறினார். சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ஓவராக அலம்பல் செய்த வனிதா, சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மனகசப்பால் பாதியிலேயே வெளியேறினார். வெளியே வந்தது பிக்பாஸ் அல்டிமேட் பற்றி கழுவு ஊற்றி பேட்டி கொடுத்து, போஸ்ட் போட்டு வந்த வனிதா, திடீரென படு ஸ்லிம்மான போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

  மதம் மாறிய வனிதா

  மதம் மாறிய வனிதா

  அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி மீடியாக்களின் கவனத்தை தன் பக்கமே வைத்திருக்கும் வனிதா, லேட்டஸ்டாக மதம் மாறியதாக போட்ட போஸ்ட் பலரையும் அதிரவைத்துள்ளது. ஏற்கனவே மூன்றாவது திருமணத்தின் போது வனிதா கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது புத்த மதத்தை பின்பற்றுவதாக போஸ்ட் போட்டுள்ளார்.

  இதுக்கு தான் மதம் மாறினேன்

  இதுக்கு தான் மதம் மாறினேன்

  மதம் மாறியது ஏன் என அவரே விளக்கமும் அளித்துள்ளார். அதில், சந்தோஷமான, மகிழ்ச்சியான அமைதியான வாழ்வை வாழ தான் சில வருடங்களுக்கு முன் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கியதாகவும், அதன் பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை என பதிவிட்டுள்ளார். இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.

  இவ்வளவு நாளா செல்லவே இல்ல

  இவ்வளவு நாளா செல்லவே இல்ல

  சில வருடங்களாக பின்பற்றுகிறீர்களா...அப்போ பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நான் வெஜ் எப்படி சாப்பிட்டீர்கள். ஏன் புத்த மதத்தில் மட்டும் தான் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கா. மற்ற மதங்களில் இல்லையா. அப்படியே புத்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்போது மட்டும் எதற்காக திடீரென வெளியிடுகிறீர்கள். இதை வைத்து பப்ளிசிட்டியா எனன கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

  English summary
  Vanitha Vijayakumar in her recent social media post, she revealed that she following Buddhism from past few years. Buddhism gives peaceful and properity life. Netizens trolls vanitha for this sudden change.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X