என் மகள் வேண்டுமென்றே அதை செய்தாள்.. சரியான கூத்து.. வனிதா விஜயகுமார் ஓபன் டாக்

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. இவர் சினிமாவில் ஹீரோயினாக சில படங்களில் நடித்தார். நடிக்கும்போது அவருக்கு வந்த பிரபல்யத்தைவிடவும் அவரது பெர்சனல் வாழ்க்கையில் நடந்த பிரச்னைகள் அவரை லைம் லைட்டில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கின்றன. முதலில் திருமண சர்ச்சையை சந்தித்தவர்; அடுத்ததாக பிக்பாஸில் கலந்துகொண்டு மேற்கொண்டு பிரபலமானார். தற்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதனை அவரது மகள் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் மிகப்பெரிய குணசித்திர நடிகராக வலம் வந்தவர். அவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளில் நடிகை மஞ்சுளா இரண்டாவது மனைவி. அவருக்கு பிறந்தவர் வனிதா. விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்த வனிதா அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். வனிதாவின் மகன் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.

திருமணங்களால் சர்ச்சை: முதல் திருமண வாழ்க்கை கசந்ததன் காரணமாக அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார் வனிதா. அடுத்ததாக இன்னொரு திருமணத்தை செய்துகொண்ட அவர் அதிலிருந்தும் வெளியே வந்தார். இரண்டு திருமண முறிவுகளுக்கு பிறகு நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் நீண்ட தூரம் பயணிக்காத சூழலில் கடைசியாக பீட்டர் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதிலிருந்தும் வெளியே வந்தார்.

Vanitha Vijayakumar Shares Funny Incident about Her Daughter Jovika

குடும்பத்துடன் பிரச்னை: சூழல் இப்படி இருக்க தனது தந்தை விஜயகுமாருடனும் வனிதாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பிரச்னைக்கு சொத்துதான் காரணம் என ஒரு தரப்பினரும்; இல்லை வனிதாவின் திருமண சர்ச்சைகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் வனிதாவை விஜயகுமாரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து ஒதுக்கிவைத்தே வருகிறார்கள். இவர்களுக்குள்ளான பிரச்னை பல முறை பூதாகரமாகி கோடம்பாக்கத்தின் தலைப்பு செய்தியாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படம்: இப்படிப்பட்ட சூழலில் பிக்பாஸில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே எலிமினேட் ஆன அவர் அநீதி படத்தில் நடித்தார். தற்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். படத்தினை வனிதாவின் மகளும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான ஜோவிகா தயாரித்திருக்கிறார். இந்தப் படமானது இவ்வருட இறுதிக்குள் ரிலீஸாகிவிடும் என்று கருதப்படுகிறது.

வனிதாவின் பேட்டி: இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா குறித்து பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஜோவிகா சரியான கூத்து செய்வார். அது என்னவென்றால் மாலுக்கு இவரை அழைத்துக்கொண்டு சென்றால் எங்கேயோ காணாமல் போய்விடுவாள். பதறியடித்து தேடுவோம். பிறகுதான் அந்த ட்ரிக்கை கண்டுபிடித்தேன். அதாவது எங்களுடன் மாலுக்கு வரும்போது நாங்கள் பார்க்காதபோது வேண்டுமென்றே சென்று காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு கொடுப்பார்களே அங்கு அமர்ந்துவிடுவார். இவரது பெயரை அனௌன்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசையால் அதை செய்வார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X