சுபமுகூர்த்தம் எப்போது?.. வனிதா விஜயகுமார் வெளியிட்ட தேதி.. ரசிகர்கள் செம ஆச்சரியம்
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

அந்தகனில் ரீ என்ட்ரி: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.
சர்ச்சையான திருமணம்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்தார். கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
தயாரிப்பாளர் ஜோவிகா: இதற்கிடையே வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிக்பாஸில் கலந்துகொண்டார். ஆனால் டைட்டில் வெல்ல முடியவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் ராபர்ட்டும், வனிதாவும் இருக்கும்படி திருமண அழைப்பிதழ் ஃபார்மெட்டில் ஒரு புகைப்படம் வெளியானது. அதனையடுத்து அவர்களுக்கு திருமணம் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அது திருமணம் இல்லை மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் ப்ரோமோஷன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார் வனிதா. அந்தப் படத்தை ஜோவிகா தயாரித்திருக்கிறார்.
சுபமுகூர்த்தம்: இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இடம்பெற்றிருக்கும் சுபமுகூர்த்தம் என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 5.55 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். அந்தப் போஸ்டரில் வனிதாவும், ராபர்ட்டும் மண கோலத்தில் இருக்கிறார்கள். அவர் பகிர்ந்திருக்கும் போஸ்டரானது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











