விஜய் - திரிஷா விவகாரம்.. பட்டு பட்டுனு பேசிய வனிதா விஜயகுமார்.. சூப்பர் டாக்

சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கேட்ட சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஒரு திருமணத்துக்கு வந்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் காதல் இருப்பதாக எல்லோருமே பேச ஆரம்பித்தார்கள். சம்பந்தப்பட்ட அவர்களோ எதுவும் ரிப்ளை செய்யவில்லை. இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான வனிதா விஜயகுமார் இரண்டு பேர் குறித்தும் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக கடந்த சில மாதங்களாகவே இருக்கிறார் விஜய். அரசியல் களத்துக்கு வந்து ஆளுங்கட்சியான திமுகவை எதிர்க்க ஆரம்பித்து நிறைய எதிரிகளை சம்பாதித்துக்கொண்டார் என்றே தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவானது சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Vanitha Vijayakumar Speaks on Vijay Trisha Rumors Amid Divorce Buzz
Photo Credit:

திரிஷாவுடன் விஜய்: அன்றைய தினம் காணொலியில் ஆஜராக அனுமதியளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே திரிஷாவின் பெயரும் இதில் பயங்கரமாக அடிபடுகிறது. முதலில் ஒரே கலரில் விஜய்யுடன் ட்ரெஸ் போட்டுக்கொண்டு பரபரப்பை பற்ற வைத்தார். அப்போதிருந்து இரண்டு பேருக்குமிடையே காதல் இருப்பதாக உறுதியாக பேச ஆரம்பித்தார்கள் சிலர். அவர்களோ எதுவும் சொல்லாமல் அமைதியாக கடந்து செல்கிறார்கள்.

Also Read
ஹீரோயின் பி.சி.ஸ்ரீராம் யார் என்றே எனக்கு தெரியாது?.. பிரியங்கா மோகன் இப்படி சொல்லிருக்காங்களே
ஹீரோயின் பி.சி.ஸ்ரீராம் யார் என்றே எனக்கு தெரியாது?.. பிரியங்கா மோகன் இப்படி சொல்லிருக்காங்களே

பிரபலங்கள் கொதிப்பு: இந்த விஷயத்தில் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாருமே விஜய் பக்கம் நிற்கவில்லை. சமுத்திரகனி, பார்த்திபன் தொடங்கி பலரும் இந்த விஷயத்தில் விஜய்யை கண்டித்தார்கள். அதிலும் சமுத்திரகனிதான் இதை முதலில் ஆரம்பித்து வைத்தது. கொதித்து போய் உண்மையான ஆதங்கத்தில்தான் அப்படி பேசினார். பார்த்திபனோ வார்த்தை ஜாலத்தில் விளையாடி சிக்கிக்கொண்டார். திரிஷா காண்டாகி ட்வீட் போடும் அளவுக்கு நிலைமை சென்றது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

வனிதாவின் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "விஜய்யை எனக்கு நன்றாகவே தெரியும். அவரும் நானும் ஒரு படத்தில் நடித்தோம். அப்போது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் வாங்கிய சம்பளத்தைவிடவும் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் குறைவு. அதனை இப்போதுதான் வெளியே சொல்கிறேன். அதேபோல் அந்த சமயத்தில் எனக்கு ஃப்ளைட்டில் டிக்கெட் போடுவார்கள். விஜய்க்கு ட்ரெய்னில் டிக்கெட் போடுங்கள்; அப்போதுதான் கஷ்டம் என்றால் என்னவென விஜய்க்கு தெரியும் என எஸ்.ஏ.சந்திரசேகர் சொல்வார்.

திரிஷா பற்றி: திரிஷாவை பொறுத்தவரை அவர் எல்லோருக்கும் நல்ல ஃப்ரெண்ட். அவரது சர்க்கிள் வேறு எனது சர்க்கிள் வேறுதான். இருந்தாலும் நல்ல பழக்கம். சினிமாவை தாண்டி நிறைய பழகியிருக்கிறோம். நான் ஃபோன் செய்யும்போது அவர் தியேட்டரில் இருந்தால், ஃபோனை கட் செய்துவிட்டு 'நான் இப்போது தியேட்டரில் இருக்கிறேன். முடித்துவிட்டு அழைக்கட்டுமா?.. இப்போது எதுவும் அவசரமா?' என்று கேள்வி கேட்பார். அவ்வளவு நல்லவர் அவர். எல்லோரும் திரிஷாவின் கதையை பேசுகிறார்கள். எல்லோரின் கதையும் எனக்கு தெரியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X