டைம் பாஸுக்கு லவ் பண்ணல.. காட்டிதான் வாய்ப்பு வாங்கணும்னு அவசியமா?.. வனிதா விஜயகுமார் அதிரடி
சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார். பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் அதிலிருந்து வெளியே வந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது திருமணத்தை செய்துகொண்டார். அவையும் பாதியிலேயே முடிந்தன. இப்போது Mrs&Mr என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜோவிகா தயாரித்திருக்கிறார்.
வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சைகளும், பிரச்சனைகளும் மட்டும்தான் நியாபகத்துக்கு வரும். தனது தந்தை விஜயகுமாருடனான மோதலில் அவர் முதல் சர்ச்சையை சந்தித்தார். விஜயகுமார் குடும்பத்துடன் சேர்வதற்கு இவருக்கு விருப்பம் இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும்; அந்தத் தரப்பு வனிதாவின் முயற்சிகள் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் டூ திருமணங்கள்: குடும்பத்தோடு ஒற்றுமையாக இருந்தபோது சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் அவர். விஜய்க்கு ஜோடியாக நடித்த அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் கதாநாயகியாக நீடித்து நிலைக்க முடியவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் சின்னத்திரை நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன்.ஆனால் அந்த திருமண வாழ்விலிருந்து வெளியேவந்த அவர்; அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்தார். அந்த திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை.

பிக்பாஸ் வனிதா: விஜயகுமாருடனான மோதலால் எழுந்த சர்ச்சைகளைவிடவும் வனிதா விஜயகுமாரை திருமண விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகள்தான் அதிகம் துரத்தின. அத்தனைக்கும் அதிரடியாக பதிலளித்த அவர்; பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதில் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் சர்ச்சைகளான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மகள் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வனிதா: பிக்பாஸுக்கு பிறகு அநீதி, அந்தகன் ஆகிய படங்களில் நடித்த அவர் இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ராபர்ஸ்ட் மாஸ்டர் ஹீரோவாக நடிக்கும் Mrs&Mr படத்தில் வனிதாவும் நடித்திருக்கிறார். ஜோவிகாதான் படத்தை தயாரித்திருக்கிறார். படமானது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. முதன்முறையாக வனிதா இயக்கியிருக்கும் படம் என்பதால் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது.
வனிதாவின் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார், 'முதலில் இந்தப் படத்துக்கு MR&Mrs என்றுதான் பெயர் வைத்திருந்தேன். ஆனால் நடிகை அம்பிகாதான் Mrs&Mr என்று பெயரை மாற்ற சொன்னார். இந்தப் படம் வெளிநாட்டில் நடக்கும்படி இருக்கிறது. அங்கிருப்பவர்களும் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கும் பாரம்பரியம், எமோஷனல் எல்லாமே இருக்கிறது.
ரிலேஷன்ஷிப்பில் இல்லை: சினிமா துறையோ இல்லை கார்ப்பரேட்டோ மாடர்னாக ட்ரெஸ் போட்டிருக்கும் பெண்கள் டேட்டிங் செல்வார்கள், தவறானவர்கள் என்று நினைக்கக்கூடாது. நான் மாடர்ன் ட்ரெஸ்தான் அதிகம் போடுவேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது. காட்டிதான் வாய்ப்பு வாங்க வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை. ஒருகாலத்தில் அந்த மைண்ட் செட் இருந்தது. நீங்கள் திருமணம் செய்துகொண்டீர்களா என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள். நான் கடந்த ஐந்து வருடங்களாக எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. ஏனென்றால் நான் டைம் பாஸுக்கு லவ் செய்யவில்லை. திருமணம் என்பது கமிட்மெண்ட். அதை வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அது நடக்காதபோது எதற்காக ரிலேஷன்ஷிப்பில் இருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











