Jovika: அடிச்சி தூக்குடா இதுதான் பொங்கல்.. ஜோவிகாவின் ஸ்பெஷல் போட்டோஸ்!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜோவிகா இன்ஸ்டாகிராமில் புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் சந்திரலேகா படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் சில படங்களில் நடித்த வனிதா, சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை வர தற்போது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

Vanitha Vijayakumar Jovika
Photo Credit:

வனிதா விஜயகுமார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று நன்றாக சமைத்து பெயர் எடுத்தார். இப்போது வனிதா விஜயகுமார் சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா, ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். அந்த படம் அண்மையில் தியேட்டரில் வெளியானது. படம் பார்த்தவர்கள் இதெல்லாம் ஒரு படமா என திட்டி தீர்த்த நிலையில், வனிதா படத்தை தனக்கு சொந்தமான யூடியூப் சேனலில் வெளிட்டார்.

Vanitha Vijayakumar Jovika
Photo Credit:

பொங்கல் ஸ்பெஷல்: மிஸஸ் அண்ட் மிஸ்டர் பட நிகழ்ச்சியில் பேசிய ஜோவிகா, இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பெரிய காரணம் விஜய் டிவி தான் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பாதித்த பணத்தை வைத்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை தயாரித்தேன் என்று பெருமையாக பேசி இருந்தார் ஜோவிகா. தயாரிப்பாளராக களமிறங்கிய ஜோவிகா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கதாநாயகியாக இரண்டு படங்களில் கையெழுத்து போட்டு இருக்கிறார். இந்நிலையில், ஜோவிகா பொங்கலுக்கு தனது இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்டுள்ளார். விளக்கி வைத்த குத்து விளக்கு போல அட்டகாசமாக இருக்கும் ஜோவிகாவின் போட்டோ ஷேர் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே இணையத்தில் டிரெண்டாகி லைக்குகளை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X