பச்சை கலர் லிப்ஸ்டிக்.. இதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும்.. வனிதாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை வனிதா பச்சை நிற டிரெஸுக்கு மேட்சாக பச்சைக் கலர் லிப்ஸ்டிக் போட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் பண்ணியுள்ளனர்.
நடிகை வனிதா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எப்போதும் சக ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டையும் சச்சரவுமாக இருந்த வனிதா ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு? பிக்பாஸ் கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சினிமா வாய்ப்புகள்
கடைசியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதாவுக்கு, அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து சின்னத்திரை மற்றும் யூட்யூப் சேனல் என பிஸியாக இருந்த வனிதாவுக்கு சினிமா வாய்ப்புகளும் வரிசை கட்டின.

பிக்கப் டிராப் பட போட்டோ ஷூட்
அனல் காற்று, 2கே அழகானது காதல், அந்தாகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், காத்து. கென்னி, பிக்கப் டிராப் என 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் வனிதா. வனிதாவின் பிக்கப் டிராப் படத்தின் போட்டோஷூட் பெரும் வைரலானது.

மகளுடன் செல்பி..
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பச்சை நிற பார்ட்டி வியர் அணிந்து தனது மகள் ஜோவிகாவுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா.

பச்சைக் கலர் லிப்ஸ்டிக்
இதில் ஃபிரி ஹேர் விட்டுள்ள வனிதா டிரெஸுக்கு மேட்சாக பச்சைக் கலர் லிப்ஸ்டிக் அணிந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இது சுத்தமாக உங்களுக்கு சூட்டாகவில்லை என்றும் சாதாரணமாக சாரியில் இருந்தாலே சூப்பரா இருக்கும் என கூறி வருகின்றனர்.
Recommended Video

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்
இன்னும் சிலர் இதுபோன்றெல்லாம் போஸ் கொடுக்க தனி கெத்து வேண்டும் என்றும் பங்மாய் கலாய்த்து வருகின்றனர். பலர் இதையெல்லாம் பார்க்க முடிவில்லை என்று வனிதாவை திட்டியும் தீர்த்து வருகின்றனர். வனிதாவின் இந்த பச்சை கலர் போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











