வேகமாக பரவும் டும்டும்டும் செய்தி... 'கொல காண்டில்' இருக்கும் வரலட்சுமி!

திருமணம் பற்றிய செய்திக்கு நடிகை வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

அமெரிக்காவில் விக்கி- நயன், விஷால் திருமண செய்தியால் கடுப்பான வரலட்சுமி- வீடியோ

சென்னை : திருமணம் பற்றி செய்தி வெளியானதால் நடிகை வரலட்சுமி சரத்குமார் 'கொல காண்டில்' ஒரு டிவீட் போட்டுள்ளார்.

சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமா மோஸ்ட் வாண்டட் நடிகையாக திகழ்கிறார். ஹீரோயின் என இல்லாமல், குணச்சித்திர நடிகையாக எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இவரும் நடிகர் விஷாலும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. இதனை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று மட்டுமே சொல்லி வந்தனர்.

வரலட்சுமிக்கு திருமணம்

வரலட்சுமிக்கு திருமணம்

இந்நிலையில் நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் வரலட்சுமி சரத்குமாரும் விரைவில் திருமணம் செய்துகொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கப் போவதாக நேற்று தகவல் பரவியது.

கோபத்தில் வரலட்சுமி

கோபத்தில் வரலட்சுமி

இதனால் ஆத்திரமடைந்த வரலட்சுமி, தனது முழு கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது திருமணம் பற்றி வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பதிவு

டிவிட்டர் பதிவு

டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "வழக்கம் போல் இந்த ஆண்டு இறுதியிலும் சில வேலையில்லாத மக்கள் எனது திருமணம் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டனர். நான் இங்கு தான் இருப்பேன். வேலை செய்து அனைவரின் ஆ..... -ஐ உதைப்பேன். எனவே அன்பு தோற்றாங்குலிகளே அடுத்த முறை இன்னும் சிறப்பாக முயற்சி செய்ய வாழ்த்துக்கள். நீங்கள் யார் என்பது எனக்கு தெரியும்", என குறிப்பிட்டுள்ளார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இதன் மூலம் தனது திருமணம் பற்றிய பேச்சுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதேபோல், விஷாலுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக செய்தி வெளியாகி இருப்பதால், இவர்கள் இருவருக்குமான காதல் பற்றிய பேச்சுக்கும் முடிவு ஏற்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X