தீபாவளி வரைக்கும் வெயிட் பண்ண முடியாது, பட்டாச ரெடி பண்ணுங்க: துடிக்கும் வரலட்சுமி
விஜய்யுடன் நடிக்கும் கனவு நிறைவேறியதாக வரலட்சுமி கூறியுள்ளார்
சென்னை: விஜய்யுடன் நடிக்கும் கனவு நினைவானதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சர்கார் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது, இந்த மிகப்பெரிய வாய்ப்பைக் கொடுத்த சன் பிக்சர்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்க்கு நன்றி எனக் கூறியுள்ள வரலட்சுமி, விஜய்யுடன் நடிக்க வேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
"விஜய்யுடன் பணியாற்றுவது நீண்ட நாள் கனவாக இருந்தது. தீபாவளி வரை காத்திருக்க முடியாது... பட்டாசை ரெடி பண்ணுங்க..." என ட்வீட் செய்துள்ளார் வரலட்சுமி.
மூன்றாவது முறையாக விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்துள்ளனர். மிகப்பெரிய அரசியல் படமாக சர்கார் தயாராகி வருகிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பிரேம்குமார், பழ கருப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











