பார்வையற்ற பெண்ணாக மாறும் வரலட்சுமி
Recommended Video

சென்னை: ஜே.கே இயக்கும் திரைப்படத்தில் வரலட்சுமி பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் கவனத்தை ஈர்த்தார்.
அடுத்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கப் போவதாக ட்வீட் செய்துள்ளார்.

சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஜே.கே இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
வரலட்சுமி நடிப்பில் சண்டக்கோழி-2 ரிலீசுக்கு தயாராக உள்ளது. விஜய்யின் சர்க்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி, முற்றிலும் மாறுபட்ட வெல்வெட் நகரம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் வரலட்சுமி பிசியாக இருந்தாலும், வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்.
பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











