என்னாது, வரலட்சுமியா?: முருகதாஸ் ட்வீட்டால் ஏற்பட்ட பரபரப்பு
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர்கள் ப்ரியதர்ஷினி மற்றும் ஏ.எல். விஜய் தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் ப்ரியதர்ஷினி தரப்பு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
முருகதாஸ்
ஜெயலலிதா படத்திற்கு தி அயர்ன் லேடி என்று பெயர் வைத்துள்ளார் ப்ரியதர்ஷினி. இந்த டைட்டில் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ப்ரியதர்ஷினி மற்றும் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதை பார்த்தவர்கள் வரலட்சுமி தான் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர். என்ன நினைத்தாரோ முருகதாஸ் உடனே அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு வரலட்சுமியின் பெயர் இல்லாமல் மற்றொரு ட்வீட் போட்டுவிட்டார்.
வரலட்சுமி
நீங்க தான் ஜெயலலிதாவாக நடிக்கிறீர்களா என்று ரசிகர்கள் வரலட்சுமியிடம் கேட்க அவர் ட்விட்டரில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, தி அயர்ன் லேடி குறித்து இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. உறுதியானால் அது குறித்து உங்களுக்கு தெரிவிக்கும் முதல் ஆள் நான் தான். வெளிநாட்டிற்கு செல்வதால் மீடியா கால்களை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் நான் நடிக்கத் தயார் என்று த்ரிஷா கூறி வருகிறார். ஜெயலலிதாவாக நடிக்க வைக்க நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில் பட்டியலிலேயே இல்லாத வரலட்சுமி ஜெயலலிதாவாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

யார் அந்த நடிகை?
ஏ.எல். விஜய் எந்த நடிகையை ஜெயலலிதாவாக நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ப்ரியதர்ஷினியும் சரி, விஜய்யும் சரி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று தான் படப்பிடிப்பை துவங்குகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் எடுக்கப்படுகிறது. இதில் யார் படம் சிறப்பாக இருக்குமோ என்ற பேச்சு தற்போதே கிளம்பிவிட்டது.


Click it and Unblock the Notifications











