ரஜினி மாதிரி ஐபிஎஸ் ஆன பிரபல நடிகை.. பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல!
Recommended Video
சென்னை: நடிகை வரலட்சுமி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய்யின் சர்கார் படத்தில் அரசியல்வாதியாகவும், தனுஷின் மாரி 2ல் ஐஏஎஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

புதிய வீடியோ:
இந்நிலையில் ராஜபார்வை எனும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் காக்கி உடையில் இருக்கும் வரலட்சுமியின், இடது தோள்பட்டையில் ஐபிஎஸ் என இருக்கிறது.
போலீஸ் நன்றி:
மேலும், "எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்திருந்தால், நிச்சயம் நான் போலீஸ் அதிகாரியாக தான் இருந்திருப்பேன். எனது வேலையை நான் நேசிக்கிறேன். எனக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் தரும் எனது இயக்குனர்களுக்கு நன்றி. அதனை ஏற்றுக்கொள்ளும் எனது ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை நீங்கள் மேலும் சிறப்பானவளாக உயர வைக்கிறீர்கள்", என வரலட்சுமி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வரலட்சுமி ஐபிஎஸ்
வரலட்சுமியின் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர், "வரலட்சுமி ஐபிஎஸ்... பேரக்கேட்டாலே சும்மா அதிருதுல்ல" என கமெண்ட் செய்துள்ளார்.

வரலட்சுமியின் வில்லத்தனம்
நடிக்க வந்ததில் இருந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் வரலட்சுமி. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தில், அவர் வில்லியாக நடித்திருந்தார். இது வெகுவாக பாராட்டப்பட்டது. அதேபோல், சர்கார் படத்திலும் வரலட்சுமி வில்லியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎஸ் கதைகள்:
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் சினிமாவின் கவனம் தற்போது போலீஸ் கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறதோ என்ற சந்தேகம் உருவாகிறது.


Click it and Unblock the Notifications











