மாமியாரையும், மனைவியையும் கை தாங்கலாக அழைத்து வந்த நிக்கோலாய்.. வரலட்சுமி மீது செம காதல்
சென்னை: சரத்குமாரின் முதல் மனைவியுடைய மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடைபெற்றது. தாய்லாந்தில் பிரமாண்டமாக நிக்கோலாய் - வரலட்சுமி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் வரலட்சுமி தனது கணவர் மற்றும் தாய் ஆகியோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
சுப்ரீம் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறியவர். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் இப்போது குணசித்திர வேடங்களில் கலக்கிவருகிறார். அவருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. முதல் மனைவியை பிரிந்த அவர் இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி.
நடிகை வரலட்சுமி: தந்தையை போல் தனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரலட்சுமிக்கு உருவானது. ஆனால் அதற்கு முதலில் சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாக பாய்ஸ், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களை அவர் மிஸ் செய்தார். ஒருவழியாக சரத்குமார் ஒத்துக்கொண்டதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வருவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

பாலாவின் படம்: சூழல் இப்படி தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலாவின் பட்டறைக்கு சென்றால் அந்த கலைஞருக்கு கண்டிப்பாக பெயர் கிடைக்கும் என்பதற்கு அடுத்த உதாரணமாக இருந்தார் வரலட்சுமி. படத்தில் உயிரை கொடுத்து நடித்திருந்தார். ஆனால் என்ன படம்தான் சரியாக போகவில்லை. இதனையடுத்து தெலுங்கு பக்கமும் சென்று நடிக்க்க ஆரம்பித்தார்.
ஜோராக நடந்த திருமணம்: இதற்கிடையே நடிகர் விஷாலை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. அதனைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மகளின் காதலுக்கு சரத்குமார் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இருவரது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து நடிப்பு: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் வரலட்சுமி. அவரது நடிப்பு பயணத்துக்கு நிக்கோலாயும் பக்கபலமாக இருந்துவருகிறார். அதுமட்டுமின்றி திருமணத்துக்கு பிறகு எனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரையும் சேர்த்துக்கொள்வேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது அந்தக் கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.
திருப்பதியில் ஜோடி: இந்நிலையில் திருப்பதி வெங்கடஜலாபதி ஆலயத்துக்கு சென்று வரலட்சுமியும், நிக்கோலாயும் சாமி தரிசனம் செய்தார்கள். அவர்களுக்கு வருவின் தாயும், நடிகையுமான சாயா தேவியும் சென்றார். அவர்கள் இரண்டு பேரையும் கோயிலில் கையை பிடித்து பாதுகாப்பாக நிக்கோலாய் அழைத்து சென்ற வீடியோதான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மாமியார் மீதும் மனைவி மீதும் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











