செல்லங்களுக்கு பிறந்தநாள்.. வருங்கால கணவருடன் செமயாக கொண்டாடிய வரலட்சுமி
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமீபத்தில்தான் அவர்களுக்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தச் சூழலில் தனது செல்லங்களின் பிறந்தநாளை நிக்கோலாயுடன் இணைந்து வரலட்சுமி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல், சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடப்த்தக்கது.
போதிய வாய்ப்பு இல்லை: பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அவருக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே விஷாலை வரலட்சுமி காதலித்தார் என்று தகவல்கள் பரவியது நினைவுகூரத்தக்கது.
பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்துவருகிறார். அவைகளை தனது குழந்தைகள் போல் வளர்ப்பேன் என்றே பல முறை சொல்லியிருக்கிறார். தற்போது அந்த இரண்டு நாய்க்குட்டிகளின் பிறந்தநாளை தனது வருங்கால கணவர் நிக்கோலாயுடன் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
டூர் சென்ற வரலட்சுமி: முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு நிக்கோலாயும், வரலட்சுமியும் தாய்லாந்துக்கு டூர் சென்றிருந்தனர். அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பதும்; அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











