வரலட்சுமிக்கு வயசு 28: அந்தமானில் பிறந்தநாள் கொண்டாட்டம்
சரத்குமாரின் மகளும் 'போடா போடி' படத்தின் நாயகியுமான வரலட்சுமி மார்ச் 3ம் தேதி தனது பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார். நண்பர்கள் பட்டாளத்துடன் அந்தமான் கடற்கரையில் ஆடிப்பாடி கொண்டாடியதைப் பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.
சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அந்தப்படம் சரியாக போகாத காரணத்தால் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை.
எனினும் நட்சத்திர கலைவிழா, ஷோரும் திறப்பு விழா,சி.சி.எல்.கிரிக்கெட் போட்டியில் சியர்ஸ் கேர்ள் என பல வேலைகளை செய்து வருகிறார் வரலட்சுமி.

28 வது பிறந்தநாள்
சரத்குமார்-சாயா தம்பதியின் மகளான வரலட்சுமிக்கு கடந்த மார்ச் 3ம் தேதியுடன் 27 வயது நிறைவடைந்துவிட்டது.

நண்பர்களுடன் அந்தமான் பயணம்
நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் நண்பர்களுடன் ஜாலியாக பொழுது போக்கி வரும் வரலட்சுமி, தனது பிறந்தநாளை கொண்டாட அந்தமானுக்கு பறந்து விட்டார்.

எல்லோருக்கும் ஐ லவ் யூ
கடற்கரையில்,ஆட்டம்,பாட்டம் என்று மணிக்கணக்கில் பொழுதைப் போக்கிய வரலட்சுமி, இதனை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தமான் கடற்கரைகளில் பிரண்ட்ஸ்களோடு சுற்றித் திரிவது மனதுக்கு இதமாக இருக்கிறது. என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் ஐ லவ் யூ என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

விஷால் ஜோடியான வரு
வரலட்சுமி தற்போது விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘மதகஜராஜா'வில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார். அதன் மூலம் விஷாலும், வரலட்சுமியும் நெருக்கமாக இருந்து வருகிறார் என்று கிசு கிசு உலா வரும் நிலையில் நண்பர்களுடன் பிறந்தநாளை அந்தமானில் கொண்டாடியுள்ளார் நாட்டாமை புதல்வி


Click it and Unblock the Notifications











