தாரை தப்பட்டையில் வரலட்சுமி கரகாட்டம் மட்டும் ஆடலையாமே?
பாலாவின் தாரை தப்பட்டைப் படத்தில் வரலட்சுமி பாலியல் தொழிலாளியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பாலாவின் அடுத்த படம் 'தாரை தப்பட்டை". இந்த படத்தில் சசிகுமார், வரலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கரகாட்டக் கலைஞர்
தாரை தப்பட்டையில் படத்தில் வரலட்சுமிக்கு கரகாட்ட கலைஞர் வேடம் என்றும், அதனால் உண்மையான கரகாட்ட கலைஞரிடம் நடனப்பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

பாலியல் தொழிலாளி
அதேசமயம் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. முதல்பாதியில் கரகாட்ட நடனக்கலைஞராக வரும் வரலட்சுமி இரண்டாவது பாதியில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாராம்.

தயக்கம் இல்லை
பாலியல் தொழிலாளியாக நடிக்க வரலட்சுமி எவ்வித தயக்கமும் சொல்லவில்லையாம். இதனால் தன்னுடைய மார்க்கெட் உச்சத்திற்குப் போகும் என்கிறார்.

மார்க்கெட் உயரும்
அனுஷ்கா, சினேகா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் போன்றோர் பாலியல் தொழிலாளியாக நடித்தபிறகுதான் அவர்களுடை மார்க்கெட் அதிகரித்தது. அதுபோன்று தனக்கும் தாரை தப்பட்டை படம் வெளியானதும் மார்கெட் அதிகரிக்கும் என வரலட்சுமி கருதுகிறாராம்.

இளையராஜா 1000
சசிகுமார் நாதஸ்வர கலைஞராக நடிக்கும் தாரை தப்பட்டை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். இந்த படம் இளையராஜாவுக்கு 1000வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











