திருமண வேலைகளில் படு பிஸியான வரலட்சுமி.. யாருக்கு பத்திரிகை வெச்சிருக்காங்க பாருங்க
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தச் சூழலில் இவர்களது திருமணம் ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடக்கவிருக்கும் சூழலில்; பத்திரிகை வைக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் வரலட்சுமி.
போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல்,சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
போதிய வாய்ப்பு இல்லை: பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. இதற்கிடையே நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை வாங்கி கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.
திருமணம்: வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர்களது திருமணம் தாய்லாந்தில் ஜூலை 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. . இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தாரும், இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் திருமணத்தை வெளிநாட்டில் முடித்துவிட்டு கோலிவுட் திரைத்துறையினருக்காக வரவேற்பை சென்னையில் வைக்கவும் வரலட்சுமி பிளான் செய்திருக்கிறார்.
பாலகிருஷ்ணாவுக்கு பத்திரிகை: இந்நிலையில் திருமணம் நடைபெற இன்னும் சில நாட்களே இருப்பதால் வரலட்சுமி பத்திரிகை வைக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு இன்று வரலட்சுமி அழைப்பிதழ் கொடுத்தார். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பாலகிருஷ்ணா; வரலட்சுமிக்கு தனது ஆசீர்வாதத்தையும், வாழ்த்தையும் தெரிவித்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











