அதற்குள் 25 படமா.. கலக்கிட்டீங்களே வரலட்சுமி..வாழ்த்துக்கள் !

சென்னை : தமிழ் ரசிகர்களால் மக்கள் செல்வி என்று அன்போடு அழைக்கப்படும் வரலட்சுமி, குறுகிய காலத்திலேயே 25 படங்களில் நடித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கி சிம்பு நடித்த போடா போடி படத்தில் நடித்தார். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.

Varalakshmi has acted in 25 films

இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார். இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.

Varalakshmi has acted in 25 films

பின்னர் பல படங்களில் நடித்தார், தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. இவர் நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படம் திரைக்கு வரவிருக்கிறது.

Varalakshmi has acted in 25 films
வரலாட்சுமி இதுவரை 25 படங்களில் நடிந்துள்ளார். குறைந்த காலத்திற்குள்ளாகவே இவர் 25 படங்களில் நடித்து விட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ரசிகர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன், என்றும் என் சிறந்த நடிப்பை தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர அர்ப்பணிப்பேன் என்றும் கூறியுள்ளார். என்னத்தான் அப்பா சினிமாவில் இருந்தாலும், தன் உழைப்பை மட்டுமே நம்பி பல படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார் வரலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X