பாலியல் துன்புறுத்தல்.. அப்பாவிடமும், அம்மாவிடமும் எப்போது சொன்னேன் தெரியுமா?.. மனம் திறந்த வரலட்சுமி
சென்னை: சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் வரலட்சுமி. தமிழ், தெலுங்கு திரைத்துறையில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வளர்ந்திருக்கிறார். இப்போது அவர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில்கூட நடித்துவருகிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே அவர் கடந்த வருடம் தனது காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். மேலும் தனது பெயருக்கு பின்னால் வரலட்சுமியின் பெயரை போட்டுக்கொள்வேன் என்றும் நிக்கோலாய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சரத்குமார். அவர் மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தொழில்களை செய்த அவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக திரைத்துறைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு பலனாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் வில்லனாகும் சான்ஸ்தான் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை நிரூபித்தார். புலன் விசாரணை படத்திலெல்லாம் விஜயகாந்த்துக்கு இணையாக ஸ்கோர் செய்தார் அவர். அதனைத் தொடர்ந்து ஹீரோவாகும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதனையும் சரியாக பயன்படுத்தி பல ஹிட் படங்களை கொடுத்து 90களில் ஃபேமஸ் நடிகரானார்.

இரண்டு திருமணங்கள்: சரத்குமார் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்தார். ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிந்துவிட்டார்கள். அவரைத் தொடர்ந்து நடிகை ராதிகாவுடன் சரத்துக்கு காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேரும் திருமணத்தில் முடித்தார்கள். இதற்கிடையே சரத்குமார் - சாயா தேவி தம்பதிக்கு வரலட்சுமி பிறந்தார். தனது தந்தை போலவே தானும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் வரலட்சுமிக்கு வந்தது. ஆனால் அதற்கு தந்தையிடமிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை. அதன் காரணமாக பாய்ஸ், சுப்ரமணியபுரம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்க வந்த சான்ஸ் எல்லாம் வரலட்சுமிக்கு மிஸ் ஆகின. இப்படிப்பட்ட சூழலில்தான் சரத்குமாரின் முன்னாள் மனைவியும் இந்நாள் மனைவியும் சேர்ந்து அவரிடம் வரலட்சுமிக்கு பெர்மிஷன் வாங்கி தந்தார்கள்.
போடா போடி வரலட்சுமி: அதன்படி சிம்புவை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி திரைப்படத்தில் வரலட்சுமியும் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் சரியாக போகவில்லை. விக்கியின் மேக்கிங் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் போட்டியாக களமிறங்கிய துப்பாக்கி படத்திடம் தோல்வியடைந்தது. அதேசமயம் வரலட்சுமியின் நடிப்போ அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸில் அவரது நடனம் பலரையும் கவர்ந்தது. நடிப்பு, நடனம், அழகு என ஒரு நடிகைக்கு என்ன தேவையோ அது அத்தனையும் இருந்ததால் முன்னணி ஹீரோயினாக மாறுவார் என்று ஆரூடமும் கூறப்பட்டது.

பெரிய வெற்றி இல்லை: போடா போடி படத்துக்கு பிறகு வரலட்சுமிக்கு வந்த படங்களில் முக்கியமானது தாரை தப்பட்டை. இந்திய அளவில் சிறந்த இயக்குநரான பாலா அந்தப் படத்தை இயக்கியிருந்தார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கொரு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் வரு அப்படத்தில் கமிட்டானார். படம் படுதோல்வியடைந்தது. ஆனால் வழக்கம்போல் பாலா படத்தில் நடித்தால் நடிகர்கள், நடிகைகளுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற விதிக்கு ஏற்ப வரலட்சுமி சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்றார். அதனையடுத்து நடித்த சர்கார் உள்ளிட்ட படங்களும் வரலட்சுமிக்கு பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை.
காதல் கிசுகிசு: இப்படிப்பட்ட நிலைமையில் அவரும் விஷாலும் மிக தீவிரமாக காதலித்தார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டது. அந்தக் காதல் சரத்குமாருடன் நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலுக்கு ஏற்பட்ட மோதலால்தான் பாதியில் முடிந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இருப்பினும் அவர்கள் இரண்டு பேருமே இந்தக் காதல் கிசுகிசு குறித்து எந்தவிதமான கருத்தினையும் பொதுவெளியில் தெரிவித்துக்கொள்ளவில்லை. நிலவரம் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் வரலட்சுமிக்கு காதல் ஏற்பட்டது. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடம் தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது.
பாலியல் தொல்லை?: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் சுமுகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். வரலட்சுமியும் தனது நடிப்பு பயணத்தி தீவிரமாக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மேக்ஸ் உள்ளிட்ட படங்கள் வந்தன. அடுத்ததாக அவர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்திலும் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துவருவதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் வரலட்சுமி. அப்போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து கலங்கியபடி பேசினார். அவரது அந்தப் பேச்சு பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் அந்த விஷயத்தை பற்றி பேசும்போது எதற்காக அழுதேன் என்பது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் விளக்கமளித்திருக்கிறார்.

வரலட்சுமி பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து அந்த நடன நிகழ்சியில் பேசும்போது அழுதுவிடேன். நான் பொதுவாக பொதுவெளியில் மிகவும் பேசும் ஆள்தான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் நான் அழுதுவிட்டேன். அது எனக்கே ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. அப்போது நான், 'வரலட்சுமி நீ உண்மையில் அழுகிறாயா' என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டேன். அங்கு நடனமாடிய பெண் கிட்டத்தட்ட என்னுடைய குண நலன்களுக்கு ஒத்துவரக்கூடியவர். அவர் சத்தமாக பேசுவார். தன்னை சுற்றியுள்ளவர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். நானும் அப்படிப்பட்டவள்தான்.
அதனால்தான் அழுதுவிட்டேன்: அப்படிப்பட்ட ஒருவர் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து சொன்னபோது எனக்கு நெருக்கமாகிவிட்டார். அதனால்தான் எனக்கு நடந்ததை பற்றி நான் சொல்லும்போதும் அழுதுவிட்டேன். நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு மனம் கஷ்டம் இருந்தால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவேன். அவர்களை மகிழ்ச்சிப்படுத்ததான் முயற்சி செய்வேன். எனக்கு சிறு வயதில் நடந்த பாலியல் தொல்லையை என்னுடைய 18ஆவது வயதில்தான் எனது அப்பா, அம்மாவிடம் சொன்னேன். அந்த மாதிரியான சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று சில பெற்றோர்கள் சொல்வதெல்லாம் தவறு. எந்தப் பெற்றோரும் அப்படி செய்யவேகூடாது.
காது கொடுத்து கேளுங்கள்: யாருக்காவது பாலியல் தொல்லையோ, துன்புறுத்தலோ நடந்திருந்தால். அவர்கள் உங்களிடம் சொல்ல வந்தால் பொறுமையாக காது கொடுத்து கேளுங்கள். பெண்கள் இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்ல அதிகம் தைரியம் தேவைப்படுகிறது. அதை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











