விஷாலை அடுத்து டிவிக்கு வரும் வரலட்சுமி: அவுக சன், இவுக ஜெயா டிவி
சென்னை: விஷாலை அடுத்து அவரின் தோழி வரலட்சுமி சரத்குமாரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பெரிய திரை பிரபலங்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது புதிது அல்ல. இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சன் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சன் நாம் ஒருவர் என்ற அந்த நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும்.
விஷால்
விஷால் தொகுத்து வழங்கும் சமூக அக்கறை கொண்ட சன் நாம் ஒருவர் நிகழ்ச்சி இன்று முதல் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியை காணத் தவறாதீர்கள் என்று விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

வரலட்சுமி
விஷாலை அடுத்து அவரின் தோழி வரலட்சுமி சரத்குமாரும் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை தான் வரலட்சுமி தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஜெயா டிவியில் வரும் 14ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ட்விட்டர்
தான் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மத்தவங்க இந்த சமூகத்துக்கு என்ன செய்றாங்கன்னு முக்கியமில்லை, நாம என்ன செய்றோம்,அதான் முக்கியம்!! வாங்க மாறலாம், நம்ம கூட இந்த உலகமும் மாறும்..#உன்னைஅறிந்தால். சமூக மாற்றத்திற்கான முதல் படி..
பிரபலங்கள்
ஏற்கனவே நடிப்போடு சேர்த்து சமூக சேவையும் செய்து வரும் வரலட்சுமி இந்த உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து அறிந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











