வரலட்சுமி சரத்குமார் வீட்டில் செம விசேஷம்.. பயங்கர ஹேப்பியா இருக்காங்களே பாஸ்.. அப்படி என்னாச்சு?
சென்னை: சரத்குமாரின் முதல் மனைவியுடைய மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடைபெற்றது. தாய்லாந்தில் பிரமாண்டமாக நிக்கோலாய் - வரலட்சுமி திருமணம் நடைபெற்றது. இந்தச் சூழலில் வரலட்சுமி பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்டாகியிருக்கிறது.
சுப்ரீம் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறியவர். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர் இப்போது குணசித்திர வேடங்களில் கலக்கிவருகிறார். அவருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றன. முதல் மனைவியை பிரிந்த அவர் இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி.

நடிகை வரலட்சுமி: தந்தையை போல் தனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரலட்சுமிக்கு உருவானது. ஆனால் அதற்கு முதலில் சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாக பாய்ஸ், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களை அவர் மிஸ் செய்தார். ஒருவழியாக சரத்குமார் ஒத்துக்கொண்டதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வருவுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
பாலாவின் படம்: சூழல் இப்படி தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலாவின் பட்டறைக்கு சென்றால் அந்த கலைஞருக்கு கண்டிப்பாக பெயர் கிடைக்கும் என்பதற்கு அடுத்த உதாரணமாக இருந்தார் வரலட்சுமி. படத்தில் உயிரை கொடுத்து நடித்திருந்தார். ஆனால் என்ன படம்தான் சரியாக போகவில்லை. இதனையடுத்து தெலுங்கு பக்கமும் சென்று நடிக்க ஆரம்பித்தார்.
திருமணம்: இதற்கிடையே நடிகர் விஷாலை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது நிறைவேறவில்லை. அதனைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மகளின் காதலுக்கு சரத்குமார் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இருவரது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடந்தது. அதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
ட்ரெண்டாகும் வீடியோ: இருவரும் திருமணத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில் வரலட்சுமி பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் வரலட்சுமி தனது வீட்டை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விளக்குகளால் அலங்கரித்திருக்கிறார். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, சந்தோஷமான தருணங்களை கொண்டாடி தீர்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











