கமல் படத்தின் டைட்டிலை பிடித்த வரலட்சுமி! கோலிவுட்ல டாப் கியர்ல போறாங்க!

Recommended Video

கமல் டைட்டிலை பிடித்த வரலட்சுமி கோலிவுட்ல டாப் கியர்ல போறாங்க!

சென்னை: கமல்ஹாசனின் டைட்டிலை வரலட்சுமி பெற்றுள்ளார்.

வரலட்சுமி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசங்களை காட்ட வேண்டும் என முனைப்புடன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Varalakshmi movie titled as Rajaparvai!

தற்போது சர்க்கார் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள வரலட்சுமியின் நடிப்பில், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது.

தற்போது இயக்குனர் ஜேகேவின் இயக்கத்தில் பார்வையற்றப் பெண்ணாக வரலட்சுமி நடித்து வருகிறார். சாய் சமரத் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு கமல்ஹாசன் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான ராஜ பார்வை திரைப்படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இப்போதைக்கு கோலிவுட்டில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை இவர்தான். சர்க்கார், சண்டக்கோழி 2 படங்களில் நடித்துள்ள வரலட்சுமி விமல் நடிக்கும் "கன்னி ராசி", பிரியதர்ஷினியின் "சக்தி" வினய்யுடன் "அம்மாயி" தனுஷின் "மாரி 2" ஜெய்யுடன் "நீயா2" சரத்குமாரின் "பாம்பன்" மனோஜ் நடராஜன் இயக்கும் "வெல்வெட் நகரம்" வைபவுடன் காட்டேரி என 11 படங்கள் கைவசம் உள்ளன.

மம்மூட்டி வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர்பீஸ் திரைப்படம் தமிழில் பேராசிரியர் சாணக்கியன் என மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் கிளாஸிக் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X