ராதிகா எனது அம்மா இல்லை.. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.. ஓபனாக பேசிய வரலட்சுமி

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் தாய்லாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு முன்பு வரலட்சுமி நடித்த மதகஜராஜா கடந்த மாதம் வெளியாகி மெகா ஹிட்டானது. இந்நிலையில் வரலட்சுமி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

சிம்புவை வைத்து நயன்தாராவின் கணவர் இயக்கிய படம் போடா போடி. இந்தப் படம்தான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில்தான் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிகையாக அறிமுகமானார். இவர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்தவர். போடா போடி படத்துக்கு முன்பு வரலட்சுமியை நோக்கி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரத் ஒத்துக்கொள்ளாததால் அந்த படங்களில் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது.

Varalakshmi Radhika Sarathkumar

பிஸி நடிகை: போடா போடி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் ஈர்த்தது. துறுதுறு நடிப்பு, அட்டகாசமான நடனம் என நடிகைக்குரிய அத்தனை இலக்கணங்களும் அவருக்கு இருந்ததை அடுத்து வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா வரலட்சுமியை தன்னுடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் மிகப்பெரிய பெயரை பெற்றார் வரலட்சுமி. கரகாட்ட நடனம், சிறந்த நடிப்பு என படம் முழுக்க அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார்.

திருமணம்: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார் வரலட்சுமி. நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். மேலும் அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். வரலட்சுமியின் நிக்கோலாய் மீதான காதலுக்கு சரத்குமார் க்ரீன் சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து அவர்களது திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடந்தது.

மதகஜராஜா: அவரது நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. அந்தப் படமானது 2012ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. சூழல் இப்படி இருக்க கடந்த பொங்கலுக்கு படம் ரிலீஸாகி மெகா ஹிட்டானது, வரலட்சுமி படத்தில் கொஞ்சம் ஓவராகவே கிளாமர் ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவரது நடிப்பில் ஃபீனிக்ஸ் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

வரலட்சுமி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது அம்மா சாயா தேவிதான். நான் ராதிகாவை ஆன்ட்டி என்றுதான் அழைப்பேன். உடனே சிலரோ நீங்கள் எப்படி ராதிகாவை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்று கேட்கிறார்கள். அவர் எனது அம்மா இல்லையே. எல்லோருக்கும் ஒரு அம்மாதானே இருக்க முடியும். அப்படித்தான் எனக்கும் ஒரு அம்மாதான் இருக்கிறார். நான் ராதிகாவை அம்மா என்று அழைக்காவிட்டாலும் எனக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. குரைப்பவர்கள் குரைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதைப் பற்றி கவலையில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X