Varalakshmi: முதல் திருமணம் நாள்.. சர்ப்ரைஸ் கொடுத்த வரலட்சுமியின் கணவர்!
சென்னை: நடிகர் சரத்குமார் மற்றும் சாயா தேவியின் மூத்த மகளான வரலட்சுமி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது நிலையில் தங்களின் முதல் திருமண நாளுக்கு, வரலட்சுமியின் கணவர் முதல் திருமண நாளுக்கு அழகான இடத்திற்கு அழைத்து சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் 2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் அவர் நடித்து வந்தார். கதாநாயகி கதாபாத்திரத்தைவிட இவருக்கு வில்லி கதாபாத்திரம் பக்காவாகப் பொருந்தியதால், அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

வரலட்சுமி சரத்குமார்: நடிகை வரலட்சுமிக்கு கடந்த ஆண்டு, தனது 14 வருட நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் தாய்லாந்தில் வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சமாளிக்க முடியல: திருமணத்திற்கு வரலட்சுமி சரத்குமாருக்கு பெரிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லாததால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டனர். அதில், தன் கணவர் குறித்து பேசிய வரலட்சுமி சரத்குமார். "என்னால் என் கணவரை வைத்து கொண்டு சமாளிக்கவே முடியவில்லை. எதற்கெடுத்தாலும் என் அப்பா அல்லது அம்மாவுக்கு வாய்ஸ் நோட்டில் செய்து என் மேல, கம்ப்ளைண்ட் செய்து கொண்டி இருக்கிறார். என் கணவருக்கு அப்பா சப்போர்ட் செய்கிறார், இவர் வாய்ஸ் நோட் அனுப்பிய உடனே, அப்பா போனில் வந்து என்ன வரு ஏன் இப்படி பண்ற என்று கேட்கிறார் என க்யூட்டாக பேசி இருந்தார்.
மனைவிக்கு சப்ரைஸ்: வரலட்சுமியின் கணவர் நிக்கோலை பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக முரட்டுத்தனமான நபராக தெரிந்தாலும், குழந்தை குணம் கொண்டவர். திருமண புதிதில் செய்தியாளர்களை சந்தித்த நிக்கோலை, திருமணத்திற்கு பிறகு தன் பெயரை மாற்ற விரும்புவதாக கூறினார் வரலட்சுமி. அதாவது, வரலட்சுமி சரத்குமார் சச்தேவாக மாற்ற விரும்பினார். ஆனால், அவர் எப்பொழுதுமே வரலட்சுமி சரத்குமார் தான். நான் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். இனி என் பெயர் நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது, வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











